Tenkasi

News January 17, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி கல்வித்துறையும் கலால் துறையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அறிவித்திருந்த ‘தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான மாபெரும் ரீல்ஸ் /ஷார்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி’க்கு படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 17. 1.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பங்கேற்பாளர்களின் கோரிக்கையை ஏற்று படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 20.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

வனப்பகுதியில் சிக்கிய 2 பேர்! போன் லொகேசன் மூலம் மீட்பு

image

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரிப் ஆகியோர் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமிகுதியில், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தென்மலை வனத்துறையினர் மற்றும் போலீசார் போன் லொகோசனை வைத்து நள்ளிரவு 12 மணி அளவில் இருவரையும் மீட்டுள்ளனர்.

News January 17, 2025

தென்காசி மாவட்டத்திற்கு 252 மெட்ரிக் டன் உரம் வருகை

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பிசானப்பருவ நெல் சாகுபடி விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, நேற்று(ஜன.16) நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு 252 மெட்ரிக் டன் யூரியா உரம் பிரித்து அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

News January 17, 2025

புதுப்பெண் தற்கொலை – ஆர்டிஓ விசாரணை!

image

பாவூர்சத்திரம் அருகே அய்யனார் கிராமத்தை சேர்ந்த சேர்மக்கனி என்பவருக்கு ஜோதி சந்திரகனி(23) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஜோதி சந்திரகனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வந்த நிலையில், நேற்று(ஜன.16) தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விசாரணையை தொடங்கியுள்ளார்.

News January 17, 2025

தென்காசி எஸ்பி கடும் எச்சரிக்கை: பெற்றோர்களே உஷார்!

image

தென்காசி எஸ்பி வெளியிட்ட செய்தியில், 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் பைக் அல்லது 4 சக்கர வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பெற்றோர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும் என அறிவுத்தியுள்ளார்.

News January 16, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 16, 2025

தென்காசி காவல்துறையின் வித்தியாச விழிப்புணர்வு 

image

தென்காசி மாவட்ட காவல்துறை சமூக ஊடகத்தின் வாயிலாக சாலையில் பயணிக்கும் போது வளைவுகளில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை பதிவை வித்தியாசமான முறையில் விழிப்புணர்வாக பதிவு செய்துள்ளது. அறிவியல் பதிவின்படி மையவிலக்கு விசை பற்றிய விழிப்புணர்வு குறிப்பு இடம் பிடித்துள்ளது.

News January 16, 2025

தென்காசி:மது விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது

image

திருவள்ளுவர் தினத்தில் தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 16, 2025

கருப்பா நதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து, பிசான சாகுபடிக்காக இன்று(16/1/25) முதல் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ஏகே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் 9,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகிறது.

News January 16, 2025

சுரண்டையில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்!

image

பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை, கோவை, திருப்பூர் செல்ல வசதியாக சுரண்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஜன.18,19 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னைக்கு மாலை 5:00 மணி & மாலை 5:30, கோவைக்கு இரவு 7.30, 8.15 மணி திருப்பூருக்கு இரவு 7.00, & 8.00 மணி. மேலும் விவரங்களுக்கு சுரண்டை பேருந்து நிலைய தொடர்பு எண்கள் 6383939571, 9629211549

error: Content is protected !!