India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் அய்யாசாமி. இவர் அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தென்காசி பாஜக நிர்வாகியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர் தென்காசி மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்னாள் பாஜக மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்காசி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் ரவி, செயலாளர் பண்டாரசிவன்,பொருளாளர் முருகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் வரும் 24ஆம் தேதி முடிதிருத்தம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடி அடைப்பு செய்து போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சைலஷ்.2003ல் போலீஸ் பணிக்கு சேர்ந்தார். இவர் பணிபுரிந்த குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகாரிகள் மீது புகார் கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் மீது புளியங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகோபாலபேரி பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி என்பவர் குமாரவேல் என்பவரின் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக புகார் செய்து இன்று(ஜன.21) ரூபாய் 4500 லஞ்சம் கொடுக்கும்கோது பத்மாவதியை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் கைது செய்தார்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் பகுதியில், பீடி சக்கரவர்த்தி த.பி.சொக்கலால் ராம் சேட் பேரன் மகேஷ் ராம் சேட் இன்று(21/1/25) காலமானார். தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பொ.சிவபத்மநாதன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோருக்கு வீரவாள் பரிசளித்தனர். உடன் 5ஆம் கட்டளை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றால சுற்றுவட்டாரத்தில் 18ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டி வருகிறது. இதனால் இன்று 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக 108 சேவை மூலம் முதலுதவி அளிக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்தார். இதில் ஏராளமான பொது மக்களும் அலுவலக பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாகன ஒட்டுநர்களும் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் 121 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 4974 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. இதில், 1835 வாகனங்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.