India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் பணி குழு மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல்கலாம் தலைமையில் தேர்தலுக்கான பணிகள் குறித்தும், தேர்தல் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளும் செய்யப்பட்டது. இறுதியாக பொறியாளர் அணியின் மாவட்ட தலைவர் அகமது அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. தென்னந்தோப்புகளில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது. தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் 40 ஆண்டு பயன்தரக் கூடிய மரங்கள் கருகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவின் மாணவர் சிவாவிற்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் சிறந்த கலைஞருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கலை இளம் மணி வளர்மணி சுடர்மணி நன்மணி முதுமணி விருதுகள் வழங்கப்பட்டன. வீரம் விதை சிலம்பாட்ட குழுவின் மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாளை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
எஸ்.காரைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணிபுரியும் பிரிட்டோ என்பவர் அப்பள்ளியில் பயிலும் 4 மாணவியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்தும், அம்மாணவிகளிடம் ஒழுக்க கேடான செயலில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று தலைமை ஆசிரியர் அ.பிரிட்டோவை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 46 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.