Sivagangai

News October 18, 2024

பாம்பு கடியால் இதுவரை 160 பேர் பாதிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் பாம்புகள் கடிப்பதால் அரசு மருத்துவமனைக்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாம்பு கடியால் இந்த வருடத்தில் (2024) மட்டும் 160 பேர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

மாவட்டத்தில் 13 வீடுகள் சேதம்

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக நேற்று (அக்.17) சிவகங்கையில் ஆறு வீடுகளும், திருப்புவனம்,காரைக்குடி, திருப்பத்தூர்,காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய இடங்களில் 1 வீடும், சிங்கம்புணரியில் இரண்டு வீடுகள் என மொத்தம் 13 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி,திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் சிவகங்கை வட்டாட்சியர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

263 பேருக்கு ரூ.9 கோடி கடனுதவி

image

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி,ஊராட்சித் துறையின் சாா்பில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 124 ஊராட்சிகளில் 263 தொழில் முனைவோா்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டது. இதில் மானியம் ரூ.2.93 கோடி என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 18, 2024

இணையவழி முகவரியின் வாயிலாக மேற்கொள்ள தகவல்

image

சிவகங்கை மாவட்டம் பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்களை https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

சிவகங்கை: மழையின் காரணமாக உயிரிழந்தோருக்கு தலா ரூ.4லட்சம்

image

சிவகங்கை, காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மின்னல், மின்சாரம் தாக்கியும், மழை நீரில் மூழ்கியும் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் 4 பேருக்கு தலா ரூ.4 லட்சம் நேற்று (அக்.16) வழங்கப்பட்டதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 17, 2024

திருவிழா தகராறில் ஒருவர் கொலை, இரண்டு பேர் கைது

image

திருப்புவனம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் மந்தை அம்மன் கோயில் மற்றும் பொங்கல் கிடா பூஜை திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவில் பூஜை செய்யப்பட்ட கிடாய் கறி பங்கு போடும் போது ஏற்பட்ட தகராறில் ஜெயப்பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். அவரை கொலை செய்த வழக்கில் அஜித்குமார்(24), ராஜேஷ் கண்ணன்(35) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பிய ஓடிய கார்த்திக்கை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

News October 17, 2024

சிவகங்கை: வீடுகளை இழந்த பத்து நபர்களுக்கு நிவாரணம்

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சிவகங்கை, இளையான்குடி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் வீடுகள் சேதமடைந்ததை வட்டாட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சிவகங்கை-2, காரைக்குடி-3, திருப்பத்தூர்-3, சிங்கம்புணரி-1, இளையான்குடி-1ஓட்டு வீடு சேதம் அடைந்த உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News October 16, 2024

9 கடைகள் மீது அபராதம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

மதுரை மற்றும் சிவகங்கையில் மழைவெதர்மேன்  எச்சரிக்கை!

image

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த புயல் உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களான மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 16, 2024

கிராமப்புறங்களில் மீன் உற்பத்தி அதிகரிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025 மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை
கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்யும் திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(அக்.16) தகவல் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!