Sivagangai

News October 26, 2024

தீபாவளிக்கு வாரச்சந்தை தேதி மாற்றம்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இதில் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அடுத்த வாரம் (ஆக்.31) ஆம் தேதி தீபாவளி வருவதால் அதற்கு முதல் நாள் (ஆக்.30) புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2024

சிவகங்கை பயணிகள் கவனத்திற்கு!!

image

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நாளை (அக். 27)மருது பாண்டியர்கள் குருபூஜை நடைபெற உள்ள நிலையில்,மதுரையிலிருந்து சிவகங்கை,பூவந்தி வழியாக தொண்டி செல்லும் வழித்தடமானது தடை செய்யப்பட்டுள்ளது.அதற்கு மாற்றாக மதுரை,மேலூர் இடையமேலூர்,சிவகங்கை, மேலூர் பைபாஸ்,ஒக்கூர் நாட்டரசன் கோட்டை,கண்டுப்பட்டி வெற்றியூர்,ஒட்டாணம் வழியாக திருவேகம்பத்தூர், தொண்டி செல்ல வேண்டுமென மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

News October 26, 2024

பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் தகவல்

image

பசும்பொன் கிராமத்தில்,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை  விழா 30.10.2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகின்ற 30.10.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பழைய சருகணி ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை முன்விரோதம் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முருகன், கண்ணதாசன் ஆகியோர் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்ததில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2024

ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.11.2024 காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப்பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் வருகின்ற 29.10.2024 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

News October 25, 2024

சிவகங்கை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

image

சிவகங்கை மாவட்டம், கட்டானிக்குளத்தில், நேற்று 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரையில் வசிக்கும் கட்டானிக்குளம் சதீஷ்குமார் என்ற இளைஞர் சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் பழகி, அவரை அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்து, சதீஷ்குமாரை போலீசார் இன்று (அக்.25) கைது செய்துள்ளனர்.

News October 25, 2024

பட்டாசு  வெடிக்க நேரம் நிர்ணயம் விதிப்பு

image

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தீபாவளியன்று ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. எனவே கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் காலை 6.00 முதல் 7.00 மணி வரையும், இரவு 7.00 முதல் 8.00 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். 

News October 25, 2024

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உதவி

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஆக்.25) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.49.52 லட்சம் மதிப்பில் பள்ளத்தூர் மற்றும் கூத்தலூர் தொடக்க கூட்டுறவு வங்கி சார்பில் வட்டியில்லா கடன் உதவியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு டான்பெட் மானிய விலையில்லா தரமான உரங்களையும் வழங்கினார். இதில் கூட்டுறவு துறை அலுவலர் மண்டல இணைபதிவாளர் ராஜேந்திரன் பிரசாத் உடன் இருந்தனர்.

News October 25, 2024

கீழடியில் ரூ.15.69 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்

image

திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, அரசு கடந்த பட்ஜெட்டில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கியது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கீழடி அகழாய்வு தளத்தில் ரூ.15.69 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை சார்பில் தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழும் என தொல்லியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளன.

News October 24, 2024

மூன்று நாட்கள் டாஸ்மார்க் கடைகள் மூடல்

image

சிவகங்கை மாவட்டத்தில் அக். 27 மருதுபாண்டியர் நினைவு நாள், அக்-30 தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு  மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்.26 மாலை 6 முதல் அக்.27 முழுவதும் & அக்.29 மாலை 6 மணி முதல் அக்.30 முழுவதும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் மூடப்படும்.

error: Content is protected !!