Sivagangai

News March 19, 2025

சிவகங்கையில் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

image

சிவகங்கை மக்களே.. சிவகங்கையில் கீழே குறிப்பிட்டுள்ள 10 இடங்களுக்கு போனீங்கனா உங்க Mind Refreshness-க்கு ரொம்பவே உதவியா இருக்கும். மறக்காம விசிட் பண்ணுங்க.. *வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்**பிள்ளையார் பட்டி கோயில்*கீழடி பாரம்பரிய அருங்காட்சியகம்*செட்டியார் மாளிகை*வேலுநாச்சியார் நினைவுச்சின்னம்*ஆயிரம் ஜன்னல் வீடு*கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் *இடை காட்டூர் தேவாலயம்*குன்றக்குடி கோயில்*சிவகங்கை அரண்மனை

News March 19, 2025

சிவகங்கையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

image

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின்,லிங்கேஸ் தம்பதியினர். இவர்களது மூத்த மகன் ஆதீஸ்வரன் 16, திருப்பாச்சேத்தி அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளையாட்டில் ஏற்பட்ட தகராற்றில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 4 பேர் ஆதீஸ்வரனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

News March 18, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை 

image

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகின்ற 01.04.2025 அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 02.04.2025 அன்று மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்து பயணச்சலுகை அட்டை புதிதாகவும் மற்றும் பழைய அட்டையினை புதுப்பித்தும் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

வரி பாக்கிக்கு சொத்து ஜப்தி கமிஷனர் எச்சரிக்கை

image

சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். மார்ச் 31க்குள் நகராட்சிக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை செலுத்த வேண்டும். 25 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளவர்களின் சொத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.

News March 18, 2025

சிவகங்கை ஆவின் பாலில் துர்நாற்றம்

image

சிவகங்கை மாவட்டத்திற்கு, சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதமும், ராமநாதபுரத்தில் 25 சதவீதமும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது ஆரஞ்சு நிறத்தில் வரும் அரை லிட்டர் பால் விரைவில் கெட்டுப் போவதாகவும், புளித்த வாடை வீசுவதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

News March 17, 2025

அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து

image

சிவகங்கை: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர் மீதான வழக்கை இன்று ரத்து செய்து உத்தரவிட்டார்

News March 17, 2025

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு

image

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Junior Stenographer, Secretariat Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 10 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணபிக்க 28 வயது மிகாமல் இருப்பது கட்டாயம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 18-03-2025. 12ம் வகுப்பு முடித்த தகுதியான நபர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை சம்பளம் கிடைக்கும். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

News March 17, 2025

திருவிழாவில் பக்தர்களைக் குளிர வைத்த இஸ்லாமியர்

image

காரைக்குடி மீனாட்சி புரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர மாசி பங்குனித் திருவிழா கடந்த 10 நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்றது. முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் செக்காலை சாலையில் உள்ள பஜார் பள்ளிவாசல் அருகே செல்லும் போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இஸ்லாமிய மக்கள், பக்தர்களுக்குத் தண்ணீர் தெளித்து நனையச் செய்து அவர்களின் சிரமத்தைக் குறைத்தனர்.

News March 17, 2025

கொத்தடிமையாக இருந்த முதியவருக்கு நிதி

image

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்பாராவ் என்கிற கொண்டக்காரி சுக்கா 60. 20 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி சென்றபோது ராமேஸ்வரம் ரயிலில் மாறுதலாக ஏறி சிவகங்கை வந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாதுரை என்பவரது தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்துள்ளார். தற்போது இவரைத் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தலைமையிலான குழுவினர் மீட்டு அவருக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் நிதி வழங்கினர்..

News March 16, 2025

காரைக்குடியில் மார்ச்.18ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மார்ச்.18ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!