India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய செய்தியாளர்கள் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட எஸ்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உண்மையை எப்போதும் உயர்த்திக் கொள்ளும் தங்கள் அர்ப்பணிப்பு,பொதுநலனைப் பாதுகாக்கும் மீடியாவின் செயற்பாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றது என்றும் அரசு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்தும், பொறுப்புணர்வுடனான செய்தியாளர்களாக திகழும் தங்களின் பணி பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நேற்று (நவ.15) நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன்கூட்டுறவுத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி வழங்க நிர்ணயிக்கப்பட்டதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1,388,87 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்தில் 87,828 பேருக்கு 530.15 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறியதாவது; நடப்பு ஆண்டில் சுற்றுச்சூழல் விருதுகள் முதல் பரிசுத் தொகை 15,000 முதல் 20,000 ரூபாய், இரண்டாம் பரிசு 10,000 முதல் 15,000 ரூபாய், மூன்றாம் பரிசு 7,500 முதல் 10,000 ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை விருது ஒரு நபருக்கு 15,000ல் இருந்து 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வைரவேல் என்பவரிடம் பத்திரம் பதிவு செய்ய ரூ.60,000 லஞ்சம் பெற்ற வழக்கில், டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., ராஜா முஹம்மது மற்றும் போலீசார், ஆகியோர் இணைந்து நேற்று(நவ.15) லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் முத்துப்பாண்டி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பத்திர எழுத்தர் புவனப்பிரியாவை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in இணையதள முகவரியிலோ 04575-240521 (1) Child Helpline 1098 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(நவ.16) சிவகங்கை நகா், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, வந்தவாசி, பையூா், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், கூத்தாண்டன், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்செயற் பொறியாளர் முருகையன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிலிண்டர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நவம்பர் 30-க்குள் உடனடியாக பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு பயன்படும் நிலப்பரப்பு, விவசாயிகள் நடவு செய்துள்ள நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை கணக்கிடும் டிஜிட்டல் பயிர் சர்வே மாநில அளவில் துவக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 521 வருவாய் கிராமங்களின் கீழ் 17 லட்சத்து 60 ஆயிரம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு செய்துள்ள பயிர்கள் குறித்த டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் 1,098 பேர் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நல்லேந்தல், புரசடைஉடைப்பு உள்ளிட்ட பகுதியில் காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் நேற்று தி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நல்லேந்தல் கிராம காடுகளில் ஆய்வு செய்ததில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு எச்சம், கிண்ணம், கல்பாசி, முதுமக்கள் தாழிகள் இருப்பதை கண்டறிந்ததாக கூறினர்.
Sorry, no posts matched your criteria.