India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படவுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று(நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவகங்கையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *SHARE*
சிவகங்கை மாவட்டத்ஹ்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞர்கள் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை காளையார்கோவில் வட்டம், மறவமங்கலம் உள்வட்டம், பால்குளம் குரூப், மறவமங்கலம் கிராமத்தில், 13.11.2024 அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
சிவகங்கை உழவர் சந்தையில் இன்று (நவ. 6) தக்காளி ரூ.32-36, பாகற்காய் ரூ. 45-52, சின்ன வெங்காயம் ரூ.56-66, பெரிய வெங்காயம் ரூ.58-68, மிளகாய் ரூ.38, கத்தரி ரூ.48, வெண்டை ரூ.44, முருங்கை ரூ.60-70, புடலை ரூ.30-36, சுரைக்காய் ரூ.22-26, அவரை ரூ.62-82, பீர்க்கங்காய் ரூ.42-46 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
சிவகங்கை அருகே தீபாவளியன்று கீழவாணியங்குடியில் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 7 பேரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அதே தீபாவளியன்று களத்தூர் சிங்கம் மனைவி லட்சுமியும் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (நவ 5) இரு கொலைகளிலும் தொடர்புடைய கீழக்குளத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் முத்துராமலிங்கத்தை தனிப்படையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள், தகுதிகளின் அடிப்படையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04567-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா அம்மாபட்டினம் கிராம நுழைவு வாயிலில் 64 ஆண்டுக்கு முன் சமுதாய கிணறு தோண்டப்பட்டு, 5 அடி உயரத்திற்கு கருங்கற்களால் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. நேற்று மதியம் 2:30 மணிக்கு இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் திடீரென அதிர்வு ஏற்பட்டு தடுப்புச் சுவர் கிணற்றிற்குள் உள்வாங்கியது. அதைத் தொடர்ந்து கிணற்றின் சுற்றுச்சுவரும் உள்வாங்கியதால், கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
நாட்டாகுடியில் அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை வெட்டியவர் அதே பகுதியைச் சேர்ந்த குண்டுமணி என கூறப்படுகிறது. அதிமுக கிளைச்செயலாளரை வெட்டி கொலை செய்துவிட்டு தனது வீட்டிற்கு தண்ணீர் குழாயை சரி செய்து தருமாறு ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். கொலை குற்றவாளியான குண்டுமணி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நாட்டாகுடி கிராமத்தில் அதிமுக கிளைச் செயலாளர் கணேசன் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீசார் குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த குண்டுமணி (25) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.