Sivagangai

News November 20, 2024

சிவகங்கையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

image

சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

News November 20, 2024

பெண்ணை வன்புணர்வு செய்த 5 பேருக்கு குண்டாஸ்

image

மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 19.09.2024 அன்று இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த விளாக்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், வில்வகுமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தரப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் நேற்று (நவ.19) உத்தரவிட்டார்.

News November 20, 2024

கறவை மாட்டுப் பண்ணையம் – சுய வேலை வாய்ப்பு பயிற்சி

image

கறவை மாட்டு பண்ணையம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் வகுப்பறை பயிற்சியுடன் செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 6374543121 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சரவணன் ஜெயம் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

போக்ஸோ வழக்கு கைதிகளுக்கு குண்டாஸ் – ஆட்சியர்

image

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.09.2024 அன்று துவரங்குறிச்சியை சேர்ந்த ராசு மற்றும் முருகேசன் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று (நவ.19) சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

News November 19, 2024

சிவங்கை: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். *பகிரவும்*

News November 19, 2024

 Gpay வில் லட்சம் பெற்ற VAO பணிநீக்கம் – ஆட்சியர் உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாக அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் வி.ஏ.ஓ ராக்கு என்பவர் ரூ.3000 Gpay வாங்கிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 19, 2024

சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கு விருது

image

சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. குழந்தைகள் தினத்தன்று(நவ.14) சிறந்த பள்ளிக்கான கேடயம், பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கரங்களில் விருதினை வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று(நவ.19) வாழ்த்து பெற்றனர்.

News November 19, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சிவகங்கை மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

News November 18, 2024

நவ.25 வரை நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சி

image

சிவகங்கையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் 39-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்தார்.

News November 18, 2024

சக ஊழியருக்காக நிதி திரட்டிய காவலர்கள்; எஸ்.பி பாராட்டு

image

சிவகங்கை மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்தில் சிவகங்கையைச் சோ்ந்த பி.முத்துக்கிருஷ்ணன்(37) பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8.6.2024 அன்று பணியிலிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, இவருடன் கடந்த 2009இல் காவல் துறையில் பணியில் சேர்ந்த சக காவலா்கள் ஒருங்கிணைந்து ரூ.24,48,893 நிதியாகத் திரட்டி நவ.17 முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் கொடுத்தனர். சிவகங்கை எஸ்.பி காவலர்களை பாராட்டினார்.

error: Content is protected !!