India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நாளை (ஜன.10) காலை 10.30 மணியளவில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமில் இலவச திறன் பயிற்சி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள், அதிவேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினந்தோறும் விபத்துகள் நடக்கின்றன.இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த 1,154 விபத்துகளில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். 791பேர் காயமடைந்துள்ளனர். டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90% பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
கல்லங்குடி கிராமத்தில் நேற்று (08.01.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள், மற்றும் 445ஊராட்சிகளில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமச்சாலைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 2024ம் ஆண்டு 4லட்சத்து 9ஆயிரத்து 249 வாகன விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் 2021ல் (16), 2022ல் (52), 2023ல் (27), 2024ல் (51)பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 29 பேர், பாலியல் வழக்கு தொடர்பாக 12 பேர், திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தலைமையாசிரியர் மற்றும் அலுவலக அறையில் உள்ள பீரோக்கள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.மானாமதுரை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் தலைமையில் பள்ளிக்கு சென்று சான்றிதழ், கோப்புகள் மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த அருள்மலர் என்ற பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு உடல் கூறாய்வு நடைபெற்றது. தவறான சிகிச்சை என்ற புகாரின் பேரில் பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பின்னா், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு கூறாய்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், சமூகத் தணிக்கை குழு, வானவில் மன்றத்தில் பணிபுரிபவர்களா நீங்கள்? உங்கள் வேலை சார்ந்த ஆய்வு, ஆலோசனை கூட்டம் ஆகியவற்றை நமது WAY2NEWS தளத்தில் பதிவிட்டு வருமானம் ஈட்டுங்கள். மேலும், உங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். விருப்பமுள்ளவர்கள் <<7598022923>>7598022923<<>> என்ற எண் OR <
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையிலான Special Educator for Behavioural Therapy, Occupational Therapist (1) Social Worker ஆகிய காலிபணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு http:/sivaganga.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகத்தில்,20ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவுத் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலமாகவும் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயன்பெற விருப்பம் உள்ள நபர்கள்https://www.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் தகவல்.
Sorry, no posts matched your criteria.