India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவைகள் மேற்குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் மாவட்டம் முழுவதும் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு 22/01/ 2025 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு வாகன விதி மீறல்களான அதி வேகம்(8,924), சிக்னல் மீறல்(3962), போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கியது(15195), மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கு(5643), கூடுதல் எடை(246), ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டியது(2,43,592), காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது(42,624) மற்றும் இதர விதி மீறல் வழக்குகள் என மொத்தம் 4,09,249 வழக்குகள் பதிவாகியுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைப்பதற்காக வருகை வரும் 21ஆம் தேதி தமிழக முதலமைச்சர் காரைக்குடி வருகை தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பின்பு ப.சிதம்பரம் இந்த தகவலை தெரிவித்தார். இதில் காரைக்குடி MLA மாங்குடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அறையினை 1077என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1967, 18004255901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடி செஞ்சையை சேர்ந்த முகமதுரியாஸின் செல் போனுக்கு ஒரு வாட்ஸ் அப் லிங்க் வந்ததை அடுத்து அதில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.27லட்சத்து 28ஆயிரத்தை செலுத்தியதில் பணம் திரும்ப கிடைக்கவில்லை என சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாட்ஸ் அப் லிங்க் அனுப்பிய மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நபரின் வங்கி கணக்கை முடக்கினர்.
சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமே(கி.ஊ) அல்லது ஊராட்சி மணியின் இலவச தொலைபேசி எண் 155340 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை அருகே மாடகோட்டை, வேம்பங்குடி போன்ற பகுதிகளில் தற்போது விளைச்சலான விளைநிலங்களில் புதிய வகை நோய் பரவி விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறும்போது, நோய் தாக்கிய பகுதிகளில் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற சிவகங்கை மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில், வீரவிதை சிலம்ப அணி மாணவர்கள் 20 பதக்கங்களை வென்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர். இதில் 7 பேர் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதை தொடர்ந்து வீரவிதை சிலம்ப அணி மாணவர்களை மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் நரேஷ் மாணவர்களை பாராட்டி இன்று வாழ்த்துகளை தெரிவித்தார்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட்டில் ஜன..2ல் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் சென்றது. அதன்படி மாவட்ட வன அலுவலர் பிரபா மற்றும் அதிகாரிகள் அன்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்ட போது கமுதியை சேர்ந்த ராஜாராம் என்பவரை பிடித்து சோதனையிட்டனர்.அவரிடம் 4.695 கிலோ திமிங்கலம் எச்சம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.பல கோடி அது எங்கிருந்து கடத்த முயற்சித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரகின்றனர்.
Sorry, no posts matched your criteria.