Sivagangai

News January 16, 2025

சிராவயல் மஞ்சுவிரட்டு – ஒருவர் பலி

image

சிராவயல் மஞ்சுவிரட்டில் அனுமதியின்றி அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டி காரைக்குடி அருகே பெரிய உஞ்சனையை சேர்ந்த சுப்பையா (41) என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார். காயமடைந்து காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

News January 16, 2025

சிராவயல் மஞ்சுவிரட்டில் நேர்ந்த சோகம்

image

சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை ஒன்று வழி தவறி கண்மாய்க்குள் விழுந்ததில் உயிரிழந்தது. காளையை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய நடுவிக்கோட்டையை சேர்ந்த தைனீஸ் ராஜா என்ற உரிமையாளரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 16, 2025

சிவகங்கை அருகே தொழில் போட்டி காரணமாக கொலை 

image

சென்னையில் இருந்து இரு வண்டிகளில் கானாடுகாத்தானுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு டூர் வந்த ஒரே டிராவல்ஸை சார்ந்த வெள்ளைப்பாண்டி என்ற டிரைவர், சாமுவேல் என்ற சக டிரைவரை தொழில் போட்டி காரணமாக நேற்று கானாடுகாத்தான் ஓட்டல் அருகே குத்தி கொலை செய்தார். தகவல் தெரிந்த செட்டிநாடு போலீஸார் வெள்ளைப்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 16, 2025

மஞ்சுவிரட்டு திடலை மாவட்ட எஸ்பி ஆய்வு

image

திருப்பத்தூர் அருகில் உள்ள சிராவயல் நாளை (ஜன.10) மஞ்சுவிரட்டு நடக்கும் அப்பகுதியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் டிப்ஸ் பார்வையிட்டு பாதுகாப்பு ஆய்வு பணி குறித்து நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் தேவகோட்டை சப் கலெக்டர் திருப்பத்தூர் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

News January 15, 2025

நாளை சிராவயல் மஞ்சுவிரட்டு 

image

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் நாளை (ஜன.16) சிராவயலில் கிராமத்தில், மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழு சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியினை, காலை 10:00 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

News January 15, 2025

சிறாவயலில் மஞ்சுவிரட்டு; அதிகாரிகள் ஆய்வு

image

திருப்பத்தூர் வட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு நாளை 16.01.2025 நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், திருப்பத்தூர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்.

News January 15, 2025

மாட்டுப்பொங்கல் கொண்டாடிய இலங்கை முன்னாள் அமைச்சர்

image

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ள சொக்கநாதபுரத்தில் இலங்கை முன்னாள் அமைச்சர் தொண்டைமான் தனது குடும்பத்தினருடன் தோட்டத்தில் டாப் 10 ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாட்டுப் பொங்கலை வெகு விமர்சையாக இன்று கொண்டாடினார். மேலும் காளைகளுக்கு வேட்டி துண்டு அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

News January 14, 2025

சிராவயல்,கண்டிப்பட்டி டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை 

image

சிவகங்கை மாவட்டம் சிராவயல் மற்றும் கண்டிப்பட்டி கிராமத்தில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, 16.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய தேதிகளில் அரசு மதுபானக் கடை எண்: 7571 7740,7573,7734 குறிப்பிட்டுள்ள கடைகளும் வருகின்ற 18/01/2025 7705,7707 ,7694அரசு மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி (ராபி) பருவத்தில் விவசாயிகள் வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிருக்கு 31-01-2025, வாழை பயிருக்கு 28-02-2025 கடைசி தேதி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட விவசாயிகள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

News January 13, 2025

நேர்காணல் ஒத்திவைப்பு – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறி சோதனை மற்றும் நேர்காணல் தேர்வு நிர்வாக காரணங்களினால் வருகின்ற 28.01.2025 அன்று ஒத்திவைக்கப்படுகிறது. உரிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!