India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுப்பட்டி பகுதியை சேர்ந்த தீபா (39)கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு செந்தாமரை என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தீபா சண்முகநாதன் பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மன உடைந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் பொங்கல்ே தொகுப்பினை கார்டுதாரர்கள் ஜன.25 வரை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் ஜன.18 வரை 84.86 சதவீதம் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது எஞ்சிய கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்க செய்யும் நோக்கில் ஜன.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 8 சீசன் தொடங்கி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்தது. இந்த சீசனில் சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த மண்ணின் மைந்தன் நா.முத்துக்குமரன் பங்கேற்று எல்லா டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று அசத்தி வந்தார். இந்தநிலையில், இன்று நடைபெற்ற கிராண்ட் பினாலே-வில் முத்துக்குமரன் வெற்றி பெற்று பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். முத்துக்குமரன் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அதிகாலையில் குளிர் வாட்டி வருகிறது. மேலும் இரவு முதலே குளிர்ந்து காற்றுடன் பனி காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்திருப்பதை காண முடிகிறது.
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில் காரைக்குடிக்கு (ஜன-21)ல்வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வக் கோளாறு காரணமாக பிளக்ஸ், பேனர் அடிக்க வேண்டாம்.முதல்வர் கலந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சித் தலைமையில் இருந்து 73 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டு பார்க்க சென்ற சிவகங்கை மாவட்டம், கோரட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் வயது(70) மாடு முட்டியதில் வயிற்றில் காயம் ஏற்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சிங்கம்புணரி பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அறிவிக்கலாம் என்ற தகவல் வந்தது.பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்காத நிலையில் நெரிசல், இடப்பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர். சிங்கம்புணரி நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
முதல்வர் ஸ்டாலின் ஜன.21ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்கிறார்.அங்கு பல்கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரவு சிவகங்கை திரும்புகிறார். மறுநாள் காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியில், விடுதலை போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் உருவ சிலையை திறந்து வைத்து அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
கூட்டுறவுத்துறை கே.ஆர்.பெரியகருப்பன் நாளை (ஜன.18) காளையார்கோயில் வட்டத்திற்குட்பட்ட கண்டிப்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியினை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்ட மீன் வளம், மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மீன் வள உதவியாளர் பணியிடத்துக்காக நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறி சோதனை, நோ்காணல் தோ்வு ஆகியவை நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வருகிற ஜன 28-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.