India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு, செலவு திட்டம் குறித்து தெரிந்து கொள்ள பொது மக்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஜன.23) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் நாளை (23.01.2025) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற ( 29.01.2025)புதன்கிழமை அன்று மானாமதுரை அனுசுயா மஹாலில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆச ஆஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகராட்சி மன்னர் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் கல்லூரி மாணவிகள் புனித ஜஸ்டின் கல்லூரி அருகே பேருந்து நின்று செல்ல வேண்டுமென மாணவிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அடுத்த சில மணி நேரங்களில் பபேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இது மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.1.2025) சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், 53,039 பயனாளிகளுக்கு ரூ.161 கோடியே 11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும் விழா பேருரை ஆற்றினார்.. இவ்விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் 2011ல் வேளாண் இணை இயக்குனராக பணியாற்றிய தங்கசாமி பாண்டியன் (71) தனக்கு கீழ் பணியாற்றிய கவிதா மற்றும் அவரது கணவர் மகேஷ் ஆகியோருக்கு பணிக்கு வராதது மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது என்ற குற்றச்சாட்டின் கீழ் மெமோ கொடுத்து பதவி உயர்வு கொடுக்க லஞ்சம் கேட்டார்.இதையடுத்து மகேஷிடமிருந்து 10,000 ரூபாயை தங்கசாமி பாண்டியன் லஞ்சம் பெற்ற போது போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.21) திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், ப.சிதம்பரம் எம்.பி. கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், அமைச்சர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர், சிவகங்கை எம்.பி. மற்றும் பலர் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் அரசனுார் அருகே இலுப்பக்குடியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஜன.20) எல்லை பாதுகாப்பு படை பயிற்சிக்கு வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் வந்தனர்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜன-25 10.00 AM to01.00 PM வரை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை,
கைப்பேசி எண் மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல். SHARE IT
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். SHARE IT
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகம் ஆகியவற்றை திறந்து வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் வருகை புரிய உள்ளார். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி சிவகங்கை, காரைக்குடியில் இன்று (ஜன.20) முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.