India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியில் சக்தி சோமியா (14) என்ற 9-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வருந்தத்தக்கது. எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று அமுமுக நிறுவனர் தினகரன் இன்று கண்டன குரல் எழுப்பி உள்ளார்.
சாக்கோட்டை பொய்யாவயல் அரசுப்பள்ளியில் 9ம்வகுப்பு படித்த மாணவர் சக்தி சோமையா நேற்று வகுப்பறையில் கம்ப்யூட்டர் இணைப்பு வயரை பிளக்கில் மாட்டிய போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்துள்ளார். இன்று தற்போது, மாணவருக்கு உடற்கூராய்வு செய்ய மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளி தலைமையாசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in என்ற இணைய முகவரியிலோ ,04575-240521, Child Help line 1098 தொலைபேசி எண்களின் வாயிலாகவோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியா நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும் சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியில் உள்ள 9ஆவது பட்டாலியனைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவி ஜீவகப்பிரியா,நிர்மலா தேவி தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர்.
காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பாண்டி (45) காங்கிரஸ் கட்சி வார்டு பொறுப்பில் நிர்வாகியாக உள்ளார். இன்று அதலை கண்மாய் பகுதியில் உள்ள அவரது வயக்காட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். அப்பகுதியில் உறவினர்கள் சென்று பார்த்தபோது உடல் முழுவதும் வெட்டுப்பட்டு பாதி உடல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் சக்தி சோமையா என்பவர் இன்று (ஜனவரி 24) பள்ளியில் கணினியை இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காரைக்குடியில் பள்ளிகளின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை விற்பனையை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், புகையிலை விற்பவர் குறித்து தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கூட தயாராக உள்ளதாகவும், கஞ்சா, புகையிலை இல்லாத காரைக்குடியை உருவாக்குவதே இலக்கு என்று காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே பி.அழகாபுரி கிராமத்தில் இரவு வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் (23) என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த வடக்கு இளையாத்தங்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெற்றிவேல் (26) என்பவரை திருமயம் போலீசார் கைது செய்து கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை வட்டம் திருவேகம்பத்தூர் ஊராட்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கூடுதல் கட்டிடமாக மருத்துவமனை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உதவி செயற்பொறியாளர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதோர் தங்கள் இருப்பிடங்களிலிருந்து Voter Helpline என்ற செயலியின் வாயிலாகவோ அல்லது https://www.nvsp.in, https://www.voters.eci.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஜன.23) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.