India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வனம் மற்றும் பிற பகுதிகளில் கம்பு, வேட்டை நாய்கள் துணையுடன் பாரி வேட்டையாட தடை உள்ளது. மாவட்ட முழுவதும் இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில் பாரி வேட்டையில் ஈடுபடுவோர் மீது வழங்கு பதியப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர் பிரபா தெரிவித்துள்ளார்.
தமிழக மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இத்திட்டம் மக்கள் மீது திணிக்கும் சூழல் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசு அமல் படுத்தக்கூடாது என சிவகங்கையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் உமாநாத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மகா சிவராத்திரியினை முன்னிட்டு வனப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் கம்பு, வேட்டை நாய் ஆகியவற்றுடன் பாரி வேட்டையாட முற்பட்டாலும், வன உயிரினங்களை வேட்டையாடினாலும் வனச்சட்டம் 1882 மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று(பிப்.25) கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘நிறைவான வாழ்விற்கு வழி வகுப்பது கனிந்த மனமா? நிறைந்த பணமா?’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேவகோட்டை வள்ளி விநாயகர் ஊரணி குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும், குப்பைகளை அகற்றி ஊரணியை சுத்தம் செய்ய உத்தரவிடக் கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங், குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதை தானே கண்கூட பார்ப்பதாகவும், கோவில் நகரங்கள் குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாகவும் கூறினார்.
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, பூச்சிக் கொல்லி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, தரத்தினை உறுதிப்படுத்தும் விதமாக சிவகங்கை பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் மருந்துகள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை தரமற்ற முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோர் மீது துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘எக்கோ’ பரிசோதனை மையத்தில் பணியிலிருந்த இதய மருத்துவர் ஒருவரும் இடமாறுதலில் சென்றதால், 6 மாதங்களுக்கு மேலாக ‘எக்கோ’ மையம் மூடப்பட்டுள்ளது. அதேபோல், அம்மருத்துவமனையில் உள்ள ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ மையமும் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் தனியாரிடம் சென்று கூடுதல் தொகைக்கு எக்ஸ்ரே எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (பிப்.24) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து 382 கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட பலர் உள்ளனர்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் (Bank of Baroda) தேசிய அளவில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேசிய அளவில் மொத்தம் 4,000 காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 223 காலியிடங்கள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு 6 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. <
Sorry, no posts matched your criteria.