India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணலுார்,சுற்று பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 249 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
நேற்று முன்தினம் பிளஸ் 1 ஆங்கில பாட தேர்வு நடந்த போது பறக்கும்படை கண்காணிப்பாளர் தலைமையில் மணலுார் பள்ளியில் சோதனை செய்தனர்.அப்போது ஜெயக்குமார் பொதுத்தேர்வை கண்காணிக்காமல் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பறக்கும்படையினர் லேப்டாப்பை பறிமுதல் செய்து அவரை தேர்வு பணியில் இருந்து விடுவித்தனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்
மானாமதுரை அருகே கல்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த சத்தியா மற்றும் ராஜா ஆகியோர் கணித ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதாகவும், மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதாகவும், பள்ளித் தலைவருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம். சிவகங்கை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (15.03.2025) சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.8ம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதும் கண்டிப்பாக வேலை.
காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பு. இவர் அயர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கம்பெனியில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மரிசா லாப்ஸ் பணியாற்றினர் பின் யோகா நிகழ்ச்சியில் சந்தித்த இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்களும் சம்மதிக்க சுப்புவின் சொந்த ஊரான காரைக்குடியில் தமிழர் கலாச்சாரப்படி திருமணம் நேற்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இனி வரும் காலங்களில் கிராம ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கிராமபராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். எனவே கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு சார்ந்த புகார்களை 1800 425 3025 என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட தாசில்தாரை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த மாணவருக்கு SHARE செய்து உதவவும்.
தேவகோட்டையிலிருந்து சிறுவாச்சி வழியாக ஏம்பல், புதுவயல் ரோடு செல்கிறது. ரோடு முற்றிலும் குறுகலாகவே உள்ளது. பஸ் போக்குவரத்தை சில நாட்கள் நிறுததப்பட்டது. இந்நிலையில் ஞானஒளிபுரம் அருகே குறுகிய வளைவில் நேற்று அரசு பஸ் மோதி டூவீலர் விபத்து நேர்ந்திருக்கும். விபத்தை தவிர்க்க நினைத்த போது பஸ் பள்ளத்தில் இறங்கியது. பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர். டூவீலரில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் க்ஷீ சௌந்திரநாயகி அம்மன் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 6 மணிக்கு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் கல்லல்-காரைக்குடி சாலையில் நடைபெறவுள்ளது. இதில் பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். வெற்றி பெறுகின்ற முதல் 4 சோடி காளைகளுக்கு விழா கமிட்டியார் சார்பில் ரொக்கத் தொகையாக பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Sorry, no posts matched your criteria.