Sivagangai

News September 7, 2024

விவசாயிகள் இடுபொருட்கள் பெற்றிட சிறப்பு ஏற்பாடு

image

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில், மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெற்றிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 22.21 இலட்சம் மதிப்பிலான இடுபொருட்களை விவசாயிகள் POS மூலமாக எளிய முறையில் பெற்று பயன்பெற்றுள்ளனர். எனவே, விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளுக்கு பணி நியமனம்

image

தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உதவி மாவட்ட ஆட்சியராக ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேவகோட்டை கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை இனி இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2024

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ஆம் தேதி விழிப்புணர்வு கூட்டம்

image

சிவகங்கை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வருகின்ற 24ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

சிவகங்கையில் 55 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாட அனுமதி

image

மானாமதுரை, திருப்புவனம் நகர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 55 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

News September 6, 2024

செப்.10 உதயநிதி சிவகங்கை வருகை; முன்னேற்பாடுகள் தீவிரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் செப்.10-ம் தேதி அமைச்சர் உதயநிதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். மாலை 4.30 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் விளையாட்டு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

News September 6, 2024

மானாமதுரை வழியாக மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக மைசூர் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை – மைசூர் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. 06241 மைசூர் – செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் 04/09/2024 (புதன்) மற்றும் 07/09/2024 (சனி) ஆகிய தேதிகளிலும், 06242 செங்கோட்டை – மைசூர் சிறப்பு விரைவு ரயில் 05/09/2024 ( வியாழன்) மற்றும் 08/09/2024 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் புறப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

News September 6, 2024

சிறுமியை அசிங்கமாக பேசிய முதியவருக்கு 2 ஆண்டு சிறை

image

திருப்பத்தூர் அருகே ரெகுநாதபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன் (72). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் நோக்கோடு அசிங்கமாக பேசி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூக்கனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று மூக்கனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News September 6, 2024

சிறுமியை அசிங்கமாக பேசிய முதியவருக்கு 2 ஆண்டு சிறை

image

திருப்பத்தூர் அருகே ரெகுநாதபட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கன்(72) அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடந்த 2017  மே 3ம் தேதி பாலியல் நோக்கோடு அசிங்கமாக பேசி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூக்கனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இன்று மூக்கனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News September 5, 2024

ஆட்சியர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம்

image

வருகின்ற 11ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியன குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

News September 5, 2024

இமானுவேல் சேகரனின் நினைவு தினம் விதிமுறைகள்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அமைதியாக முறையில் நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பார்வையாளர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை & பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டி சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் இன்று கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.