Sivagangai

News February 24, 2025

382 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றார்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (பிப்.24) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து 382 கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட பலர் உள்ளனர்.

News February 24, 2025

சிவகங்கை: பரோடா வங்கியில் தொழிற்பயிற்சி

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் (Bank of Baroda) தேசிய அளவில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேசிய அளவில் மொத்தம் 4,000 காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 223 காலியிடங்கள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு 6 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. <>இந்த லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11. Share It..

News February 24, 2025

தேவகோட்டையில் 40 பவுன் கொள்ளை….

image

தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை.வெளிநாட்டில் பணிபுரிகிறார்.இவரது மனைவி சீதாலட்சுமி 35. இங்குள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
காய்கறி வாங்க சென்ற அவர் வீட்டில் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.2.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதம் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.

News February 23, 2025

பிப்ரவரி 28 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் பிப்ரவரி (28) காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 22, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28.02.2025 அன்று முற்பகல் 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

அரண்மனை சிறுவயலில் உள்ள ஆயுதங்கள்

image

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் கிராமத்தில் உள்ள பழமையான ஜமீன் அரண்மனையில் பழமையான மேல் கம்பு, வளரி,சுறா தண்டில் செய்த ஆயுதம், குறுவாள், கர்லாக்கட்டை, கல்லால் செய்த உடற்பயிற்சி ஆயுதம் இருப்பதை காண முடியும்.மருது பாண்டியர்கள் இங்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த ஊரில் அரண்மனை கட்டிய பிறகே அரண்மனை சிறுவயல் என்று அழைக்கப்படுவதாக வரலாறு குறிக்கிறது.

News February 22, 2025

சிறந்த பணிக்கான விருதைப் பெற்ற சார்பு ஆய்வாளர்

image

மத்திய அரசால் வழங்கப்பட்ட சிறந்த பணிக்கான விருதினை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திடம் மாவட்ட குற்ற பதிவேடு காவல் சார்பு ஆய்வாளர் நாகராஜன் இன்று (பிப்.22) பெற்றுக் கொண்டார். மேலும் சார்பு ஆய்வாளர் நாகராஜன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 22, 2025

மார்ச் 15க்குள் இலவச மின் இணைப்பு

image

சிவகங்கை,:தமிழகத்தில் இலவச மின் இணைப்புகளை மார்ச் 15க்குள் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப் பட்டுள்ளது. 50 சென்ட்-க்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், வருவாய் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மின்வாரியத்திற்கு ஆன்லைனில் இலவச மின்சாரம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மூப்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.

News February 21, 2025

காந்தி மேலாடை அணிய மறுத்த கதை தெரியுமா.?

image

காந்திய தொண்டரான தோழர் ஜீவா இளமை பருவத்தில் ஆசிரியராக பணியாற்ற வந்து சேர்ந்த இடம் சிவகங்கை, சிறாவயல் அருகே உள்ள மருதங்குடி.இங்கே அவர் காந்தி பெயரில் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு, 1927இல் காந்தி வருகை தந்தார்.இங்கிருந்து மதுரை செல்லும் வழியில், ஏழை விவசாயிகள் கந்தல் துணியுடன் இருப்பதை பார்த்த காந்தி தனது பகட்டான ஆடையை துறக்க முடிவு செய்தாராம். காந்தி ஜீவா நினைவாக இங்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

News February 21, 2025

கண்ணங்குடி மாணவி மலேசியா நாட்டிற்கு பயணம்

image

தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி எப்சிபா மாநில அளவில் நடைபெற்ற திரைப்படம் திரைக்கதை விமர்சனம் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றார். பிப்.23, 28ஆம் தேதி வரை மலேசிய நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ளார். இன்று மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.

error: Content is protected !!