Sivagangai

News March 2, 2025

டிராக்டர் ஓட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 2, 2025

தரையில் அமர்ந்து உணவருந்தும் அரசு ஊழியர்கள்

image

பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்த அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட அலுவலர், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.ஆண், ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட குடிநீர், டேபிள் வசதியுடன் கூடிய ‘பொதுவான அறை’ இல்லை. ஊழியர்கள் பொதுமக்கள் செல்லும் நடைபாதையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

News March 2, 2025

செட்டிநாட்டில் விமான நிலையத்தில் ஆய்வு

image

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி செட்டி நாட்டு விமான ஓடுதளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உதான் திட்ட சிறப்பு அதிகாரி ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., சக்தி மணி, எஸ்.வி.பி., ஏர்போர்ட் சந்திரமவுலி, சீனிவாசன், காரைக்குடி தாசில்தார் ராஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

News March 1, 2025

தேர்வு கண்காணிப்பில் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் 12ஆம்‌ வகுப்பு பொதுத்தேர்வை 83 தேர்வு மையங்களில், ஆண்கள் 7234 பேர், பெண்கள் 8829 பேர் உட்பட மொத்தம் 16,633 பேர் எழுதுகின்றனர். 174 மாணவ, மாணவிகள் தனித்தேர்வர்களாகவும், தேர்வு கண்காணிப்பில் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 83துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள், 10க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2025

லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு மூன்றாண்டு சிறை

image

திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் 2013 ல் தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய காரையூர் விஏஓ ராஜாவை (49) அணுகினார். அதற்கு ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.

News March 1, 2025

திருப்பத்தூர் : லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு மூன்றாண்டு சிறை

image

திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் 2013 ல் தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய காரையூர் விஏஓ ராஜாவை (49) அணுகினார். அதற்கு ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டார். இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.

News March 1, 2025

காரைக்குடியில் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு

image

காரைக்குடி பர்மா காலனி சக்தி வீரமா காளியம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா பிப். 18 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து மது முளைப்பாரியுடன் சக்தி வீரமா காளி பவனி நடந்தது.நேற்று முன்தினம் இரவு, அரிவாள் ஏணியில் பூஜாரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். SHARE செய்யவும்

News March 1, 2025

தேவகோட்டையில் வீட்டை உடைத்து கொள்ளை

image

தேவகோட்டை ஆசிரியை சீதாலட்சுமி வீட்டில் பிப்., 23ல் வீட்டு கதவை உடைத்து 40 பவுன், ரூ 2.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்ததில் திருடியவர் காரைக்குடி சத்யா நகர் சரவணன், என தெரிந்தது. விசாரணையில் சரவணனின் தோழி காரைக்குடி கழனிவாசல் ராஜ்குமார் மனைவி செல்வி 40, செல்வியின் மகன் கார்த்திகேயன் 20, மகள் பிர்யதர்ஷினி 22, திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்தனர்

News February 28, 2025

707 கி.மீ.. 13 நாட்களில் கடந்த சிவகங்கை சிறுவர்கள்

image

Chozhan Book Of World Records சார்பில் மாரடைப்பு நோய், பெண்கள் பாதுகாப்பு, உலக அமைதி உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி கடந்த (16/02/2025) கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை நடைபெற்றது. இதில் மானாமதுரையைச் சேர்ந்த நாகேந்திரன்-சுமதி தம்பதியரின் மகன்கள் ஹரித்திக் ராஜா, மோசிக் ராஜா சிறுவர்கள் கலந்துகொண்டு 707 கி.மீ தூரத்தை 13 நாட்களில் சென்றடைந்தனர்.

News February 28, 2025

காரைக்குடி மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் JUNIOR STENO GRAPHER, SECRETARIAT ASSISTANT பதவிகளுக்கான காலி இடங்கள் இருக்கிறது. இந்த வேலைக்கு 12 படித்திருந்தாலே போதுமானது.தகுதியான நபர்களுக்கு 19,900 முதல் 81,100 வரை சம்பளம் கிடைக்கும். வேலை விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 18.03.2025
விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும்

error: Content is protected !!