Sivagangai

News October 11, 2024

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

image

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: மாவட்டத்தில் 2024- 2025ம் ஆண்டிற்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பிரீமிய தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம். நவம்பர் 15 க்குள் காப்பீடு செய்துவிட வேண்டும் என்றார்.

News October 11, 2024

காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்

image

காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு நேற்று (அக்.10)மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் முத்துத்துரை தலைமை ஏற்றார்.27வது வார்டு அ.தி.மு.க.,கவுன்சிலர் பிரகாஷ்: கொசுவை தடுப்பதற்காக ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பள விவரம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சித்திக் குறுக்கிட்டு பேசினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

News October 10, 2024

சிவகங்கை: திமுக அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்

image

சிவகங்கை காரைக்குடியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 27 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரகாஷ், கொசு உற்பத்தியை தடுப்பதற்காக 80 ஊழியர்கள் இருக்கின்றனர். எனவும் அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை எனக் கூறியபோது திமுக கவுன்சிலருக்கும் அதிமுக கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் மாறி மாறி திட்டிக்கொண்டதால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News October 10, 2024

சிவகங்கை: காதலியை பீர் பாட்டிலால் குத்தி காதலனும் மரணம்

image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகில் இன்று (அக்டோபர் 10) சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, அவரது காதலர் ஆகாஷ் அவரை சந்திக்க வந்துள்ளார். இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆகாஷ் பீர் பாட்டிலால் மேற்படி மாணவியை கழுத்தில் குத்தி விட்டு, தானும் வயிற்றில் குத்திக் கொண்டதில் இறந்துள்ளார்.

News October 10, 2024

சிவகங்கை ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு

image

சிவகங்கை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணியிடங்கள் சிவகங்கை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன விற்பனையாளருக்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வி, படித்திருக்க வேண்டும் www.drbmadurai.net என்ற இணையதளம் முகவரியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

சிவகங்கை அருகே ரூ.3 கோடியில் மேம்பால பணி நிறைவு

image

பழையனுார் -ஓடாத்துார் இடையே செல்லும் கிருதுமால் நதியால் மழை காலங்களிலும், கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறப்பின் போதும் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 2023,மூன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். தற்போது பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது கிராம மக்கள் மகிழ்ச்சி.

News October 10, 2024

கல்வி கடன் முகாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட வட்டங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று (அக்.10) காளையார்கோவில் செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

சிவகங்கை: பொது மயானத்திற்கு இடம் ஒதுக்கிய தமிழக அரசு

image

சிவகங்கை மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் கத்தப்பட்டு ஊராட்சியில் சில சமுதாயத்திற்கு பொது மயானம் இடமில்லாமல் இருந்தது. கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனிடம் கோரிக்கை வைத்தனர். தற்பொழுது பொது மயானத்திற்கு அரசு இடம் ஒதுக்கியது. இதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கண்ணனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்

News October 9, 2024

மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவர்

image

சாக்கோட்டை அருகே உள்ள பெரியகோட்டை கருத்தாண்டி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லையா(58).இவரது இரண்டாவது மனைவி கருப்பாயி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு(அக்.07)மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா, கருப்பாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அவரை சாக்கோட்டை போலீசார் நேற்று (அக்.08)கைது செய்தனர்.

News October 8, 2024

சிவகங்கை சிறந்த விவசாயிகளுக்கு விருது

image

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து, சான்றுடன் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.