Sivagangai

News July 12, 2024

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்ட குன்றக்குடியில் ரோந்து பணியின்போது ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்ச ரூபாய் கஞ்சாவை போலீசார் கடந்த 8-ஆம் தேதி கைப்பற்றினர். இந்நிலையில் விழிப்புடன் செயல்பட்டு கடத்தலை தடுத்த காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

News July 12, 2024

தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு

image

மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெறும் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் செவ்வூர் ஏ.வி.எம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேவஜெஃபினா, பார்கவி ஆகியோர் ‘ஒருங்கிணைந்த விவசாய முறை மற்றும் கூட்டுறவு முறை’ எனும் தலைப்பில் அறிவியல் ஆய்வு கட்டுரையை ஆகஸ்ட் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சமர்ப்பிக்க உள்ளனர். அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத்திடம் இன்று வாழ்த்துக்களை பெற்றனர்.

News July 12, 2024

நிவாரணத் தொகை வழங்கிய ஆட்சியர்

image

தேவகோட்டை அடுத்த சின்ன பிரம்பு வயல் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்து 4 கொத்தடிமைத் தொழிலார்கள் மீட்கப்பட்டு, மாவட்ட கொத்தடிமை மறு வாழ்வு நிதியிலிருந்து ரூ.1,20,000 நிவாரணத் தொகையினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று வழங்கினார். இதில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 12, 2024

சிவகங்கை மதுபிரியர்களுக்கு முக்கிய தகவல்

image

சிவகங்கையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றை மூட எஸ் பி பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

News July 12, 2024

சிறந்த பணி செய்த காவலர்களுக்கு சான்றிதழ்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 7 காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் மதி உட்பட 7 காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் சிறந்த பணி செய்ததற்கு பாராட்டு சான்றிதழை வழங்கி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

News July 11, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை சிவகங்கை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 11, 2024

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்களுக்கு பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்த விருதுக்கான விண்ணப்பம், https://awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து ஜூலை 11, மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

News July 10, 2024

சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் ஆணையரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா வருகின்ற 15.07.2024 அன்று சிவகங்கை-முத்துப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

சர்தார் பட்டேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்த நபர்களுக்கு “சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை  விருது 2024” வழங்கப்படவுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தகுதியுடைய நபர்கள் (https://awards.tn.gov.in) என்ற  இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

இந்திய இராணுவத்தால் அக்னிபாத் திட்டத்தில், இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இத்தேர்விற்கு  ஜூலை 28ம் தேதிக்குள்  www.agnipathvayu.cdac.in என்ற  இணையதள  முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து  பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!