India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் 1293 பள்ளிகளில் சத்துணவு மையங்களுக்கு ஒதுக்கிய முட்டை அழுகியதால் மைய பொறுப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு முட்டைகளை வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். இதுவரை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என ஆட்சியர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களில், அரசனூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவிக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கலெக்டர் சிறப்பித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 09.07.2024 முதல் 12.07.2024 வரை மற்றும் 15.07.2024 ஆகிய தேதிகளில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பல்வேறு தொழில் நெறி நிகழ்ச்சிகள் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் மாநில அளவிலான 22ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம் பெற்றதை பாராட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவுக்கு சாதனை நாயகர் விருதை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமரனிடம் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் பனை மரங்கள், செங்கல் சூலைகளுக்காக உரிய அனுமதி பெறாமல் வெட்டப்படுகின்றன. இதை தடுக்க கோரி தேவகோட்டையைச் சேர்ந்த அன்னம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு குறித்து நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில், கருணை அடிப்படையில் பயனாளி ஒருவருக்கு பணி நியமன ஆணையினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா வழங்கினார். இதில் வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள படிப்பு வட்டத்தில் இன்று முதல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2 ஏ நிலையில் உள்ள 2327 காலிப்பணியிடத்திற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சியின் போது நேரடி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இப்படிப்பு வட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் 99656 81698 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
காளையார்கோவில் அடுத்த பாண்டியன் கோட்டையில் தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தலைமையில் நேற்று பலர் கள ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வட்ட சில்லுகள், ஓட்டு எச்சங்கள், செங்கல் எச்சங்கள் மற்றும் 2000 ஆண்டுகள் பழமையான தமிழில் மோசிதபன் என எழுதப்பட்ட பானை ஓடும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பழமையை அறிந்து கொள்ள தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகங்கை மாவட்ட பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி அறிவித்துள்ளார். இதற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் சுழற்சி முறையில் தங்கி பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 3ஆம் தேதி இறுதி நாளாகும்.
Sorry, no posts matched your criteria.