Sivagangai

News October 28, 2024

ஆட்டு இறைச்சி வணிகர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம் பதிவு சான்று பெற்றிருத்தல் வேண்டும், நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில்வர் பாத்திரங்களில் மட்டும் வாங்க வேண்டும், நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

சிவகங்கையில் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன் தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளினால் உள்நாட்டு இன மீன்களை அழிக்கும் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகை மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியது. ஆகையால் இதனை தடை செய்வதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

காளையார்கோவில்: இளைஞர் மயங்கி விழுந்து மரணம்!

image

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நேற்று (அக்டோபர் 27) மருது பாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்ற நிலையில், காளையார்கோவில் மறவமங்கலம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்ற இளைஞர் ஆரவாரமாக ஆடி வந்து மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு முன்பு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேற்படி அன்புராஜ் மாரடைப்பால் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 28, 2024

சிவகங்கையில் ரூ.2 கோடியில் திமிங்கல எச்சம் பறிமுதல்

image

திருப்பத்துாரில் ஒரு வீட்டில், திமிங்கல எச்சம் பதுக்கி உள்ளதாக, எஸ்.பி., ஸ்ரேயா குப்தாவிற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துார் டவுன், முத்துக்குமார், 43, வீட்டில் சோதனை நடத்தினர். அதில், 2 கோடி ரூபாய் மதிப்பில், 2 கிலோ திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர்.எச்சத்தை கடத்தி பதுக்கி வைத்தத திருப்பத்துார் சத்தியநாராயணன், 22, உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.

News October 27, 2024

உணவு தொடர்பாக புகார் அளிக்க எண் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கால பதார்த்தங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்பவர்கள், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, தரமான முறையில் உணவுப் பொருட்களை நுகர்வோர்களுக்கு வழங்கிட வேண்டும்.இது தொடர்பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்பு

image

சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நேற்று (அக்.2) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்திய அளவில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வண்ணம் அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார்படுத்திடும் வகையில், வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

News October 27, 2024

காரைக்குடி: மகன் திட்டியதால் தாய் தற்கொலை

image

விருதுநகர் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரையை சேர்ந்தவர் ராமலட்சுமி(65)இவரது மகன் சிவக்குமார். திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மது குடித்து விட்டு சிவக்குமார் தனது தாய், தந்தையை திட்டியுள்ளார். இதில் மனம் உடைந்த ராமலட்சுமி காரைக்குடியிலுள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி இங்கு வந்து விஷம் அருந்தினார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார்

News October 26, 2024

இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை 

image

காளையார்கோயிலில் வரும் அக்.27 அன்று 223வது மருதுசகோதரர்கள் நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்குஞ்சலி செலுத்த வருபயர்கள், முன் அனுமதி பெற்று சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்று எக்காரணம் கொண்டும் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 26, 2024

தீபாவளிக்கு வாரச்சந்தை தேதி மாற்றம்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இதில் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அடுத்த வாரம் (ஆக்.31) ஆம் தேதி தீபாவளி வருவதால் அதற்கு முதல் நாள் (ஆக்.30) புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2024

சிவகங்கை பயணிகள் கவனத்திற்கு!!

image

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நாளை (அக். 27)மருது பாண்டியர்கள் குருபூஜை நடைபெற உள்ள நிலையில்,மதுரையிலிருந்து சிவகங்கை,பூவந்தி வழியாக தொண்டி செல்லும் வழித்தடமானது தடை செய்யப்பட்டுள்ளது.அதற்கு மாற்றாக மதுரை,மேலூர் இடையமேலூர்,சிவகங்கை, மேலூர் பைபாஸ்,ஒக்கூர் நாட்டரசன் கோட்டை,கண்டுப்பட்டி வெற்றியூர்,ஒட்டாணம் வழியாக திருவேகம்பத்தூர், தொண்டி செல்ல வேண்டுமென மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.