Sivagangai

News October 30, 2024

சிவகங்கை நகராட்சியில் சர்வர் பிரச்னை

image

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சர்வர் பிரச்னையால் கடந்த 10 நாட்களுக்கும் மேல் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவிற்காக 100க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களில் 60 பிறப்பு சான்று, 30 திருத்த சான்று, ஒரு இறப்பு சான்று தொடர்பான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர்.

News October 30, 2024

தொழில் முனைவோர்களுக்கு ஊக்கவிப்பு முகாம்கள்

image

சிவகங்கை மாவட்ட தொழில் முனைவர்களுக்கு பயனுள்ள வகையில் வட்டார அளவிலான தொழில் ஊக்கவிப்பு முகாம்கள் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, நவ.6 திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும். மேலும், நவ.9 ஆம்தேதி 11.00 AM அளவில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3.00 PM அளவில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறும் என ஆட்சியர் தகவல்.

News October 29, 2024

இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II மற்றும் தொகுதி II A –தேர்விற்கான முதன்மைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சி வகுப்பினை மாணாக்கர்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

கண்மாயில் உள்நாட்டு மீன் வளர்ப்போர் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டம் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார். கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர், சிவகங்கை – 630561 என்ற முகவரியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.

News October 29, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

காரைக்குடி பல்.கலை பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஆப்சென்ட்

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை நேற்று (அக்.28) வழங்கினார். அறிவியல் அறிஞர் பட்டமும், 93 பேருக்கு முனைவர் பட்டமும், பல்வேறு துறைகளில் பயின்ற 42 ஆயிரத்து 433 மாணவ மாணவியருக்கு பட்டமும் வழங்கப்பட்டன. இதில் 277 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை.

News October 29, 2024

ட்ரோன் பறக்க தடை – சிவகங்கை மாவட்ட எஸ்பி அறிவிப்பு

image

வரும் 30ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு தேவர் குருபூஜை விழாவிற்கு செல்வதால் கீழடியில் இருந்து மானாமதுரை எல்லை வரையில் உள்ள நான்கு வழிச்சாலைகள் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

ஆட்டு இறைச்சி வணிகர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம் பதிவு சான்று பெற்றிருத்தல் வேண்டும், நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில்வர் பாத்திரங்களில் மட்டும் வாங்க வேண்டும், நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

சிவகங்கை: தீபாவளி சிறப்பு காம்போ பேக் தொடக்கம்

image

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்டம் பாம்கோ தலைமை அலுவலகத்தில் 190 ரூபாய்க்கு தீபாவளி சிறப்பு காம்போ விற்பனையை மண்டல இணைப்பதிவாளர் இன்று (அக்-28) துவக்கி வைத்தார். உடன் பாம்கோ துணைப்பதிவாளர்/செயலாட்சியர், கூட்டுறவு சார்பதிவாளர்/நிர்வாக அலுவலர், பொதுமேலாளர் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News October 28, 2024

தாட்கோ சார்பில் மானிய தொகைக்கான ஆணைகள் வழங்கல்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (அக்.28) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தாட்கோ சார்பில் ரூ.1,25,000 மதிப்பீட்டில் மாடு வளர்க்க மானியத் தொகைக்கான ஆணையும், ரூ.8,77,033 மதிப்பீட்டில் டூரிஸ்ட் வாகனத்திற்கான மானியத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.