India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ஆம் தேதி
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://tinyurl.com/svgcandidatereg என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (அக்.3) தகவல் தெரிவித்துள்ளார்.
மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மின்தடை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அறிிக்கப்பட்டுள்ள பகுதிகள் மதகுபட்டி துணை மின் நிலையம் உட்பட்ட மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சிபட்டி, நாமனுார், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பேரணிப்பட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, கருங்காப்பட்டி & சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
சிவகங்கை-மானாமதுரை புறவழிச்சாலையில் ரேசன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சிவகங்கை சி.எஸ்.சி.ஐ.டி பிரிவு அருகே TATA 207 வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில், 13 மூட்டைகளில் 520 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து, சிவகங்கையை சேர்ந்த மதுபாலன்(30), மதுரையைச் சேர்ந்த சூர்யா(22) ஆகியோரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் அருகேயுள்ள வைரவன்பட்டி கருப்பர் கோயில் காளை கடந்த 28 ஆண்டுகளாக சிராவயல், அரளிப்பாறை உள்ளிட்ட மஞ்சு விரட்டுக்களில் பங்கேற்று கிராமத்திற்கு பெருமை தேடித்தந்தது. நேற்று முன்தினம்(செப்.30) இரவு உடல்நலக்குறைவால் இறந்தது. நேற்று(அக்.01) கிராமத்தினர் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். காளையின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலுக்கு அருகில் அடக்கம் செய்தனர்.
பெருமைக்குரிய நகரம் கீழடியின் சிறப்பை அறிந்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து துணை ஜனாதிபதியிடம் விருது பெற்ற கீழடி ஊராட்சி தலைவர் வெங்கட சுப்பிரமணியனை, சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் (ம) கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று(அக்.,1) பாராட்டு வாழ்த்து தெரிவித்தார். உடன் சிவகங்கை மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் கீழடி சங்கர் இருந்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் நேற்று (அக்.1) நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அவருடன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 02.10.2024 காந்தி ஜெயந்தி அன்று காலை 11.00 மணி அளவில்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (செப்-30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு
தகுதியான நபர்கள் உரிய சான்றுகளுடன் வரும் 31ஆம் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.30) தகவல் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் FL2. FL3, உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் வருகின்ற 02.10.2024 அன்று (புதன் கிழமை) மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சிவகங்கை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் அக்.5ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்கால் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.