India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுக்காக இன்றைய தினம் (12/10/2024)வருகை தந்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சோ.ஜோ.அருண் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கி வரவேற்றார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கையில் ரயில்வே பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழை நீரில் நேற்று(அக்.12) இரவு ஒருவர் நடந்து சென்று கடக்க முயன்றதாகவும், போனவர் திரும்பி வரவில்லை என்றும் தகவல் பரவி இருந்தது. இந்நிலையில் காவல்துறையினரும் தீயணைப்பு மீட்புப் படையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். இந்நிலையில் குயிலியின் நினைவை போற்றும் வகையில் சிவகங்கை சூரக்குளம் பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குயிலியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்தியாவில் ரயில்வே துறை வளர்ந்துள்ளதாகவும், விரைவில் புல்லட் ரயில் வசதிகள் வந்துவிடும் எனவும் தெரிவித்தார்.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: மாவட்டத்தில் 2024- 2025ம் ஆண்டிற்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பிரீமிய தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம். நவம்பர் 15 க்குள் காப்பீடு செய்துவிட வேண்டும் என்றார்.
காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு நேற்று (அக்.10)மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் முத்துத்துரை தலைமை ஏற்றார்.27வது வார்டு அ.தி.மு.க.,கவுன்சிலர் பிரகாஷ்: கொசுவை தடுப்பதற்காக ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பள விவரம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சித்திக் குறுக்கிட்டு பேசினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
சிவகங்கை காரைக்குடியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 27 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரகாஷ், கொசு உற்பத்தியை தடுப்பதற்காக 80 ஊழியர்கள் இருக்கின்றனர். எனவும் அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை எனக் கூறியபோது திமுக கவுன்சிலருக்கும் அதிமுக கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் மாறி மாறி திட்டிக்கொண்டதால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகில் இன்று (அக்டோபர் 10) சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, அவரது காதலர் ஆகாஷ் அவரை சந்திக்க வந்துள்ளார். இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆகாஷ் பீர் பாட்டிலால் மேற்படி மாணவியை கழுத்தில் குத்தி விட்டு, தானும் வயிற்றில் குத்திக் கொண்டதில் இறந்துள்ளார்.
சிவகங்கை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணியிடங்கள் சிவகங்கை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன விற்பனையாளருக்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வி, படித்திருக்க வேண்டும் www.drbmadurai.net என்ற இணையதளம் முகவரியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழையனுார் -ஓடாத்துார் இடையே செல்லும் கிருதுமால் நதியால் மழை காலங்களிலும், கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறப்பின் போதும் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 2023,மூன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். தற்போது பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது கிராம மக்கள் மகிழ்ச்சி.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட வட்டங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று (அக்.10) காளையார்கோவில் செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.