Salem

News January 28, 2025

ஜன 31 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம் ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வருகின்ற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆட்சித் தலைவர் அலுவலகம் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் எரிவாயு பதிவு, விநியோகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நுகர்வோர் கூட்டத்தில் தெரியப்படுத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News January 28, 2025

ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்ற பாரா வீராங்கனை!

image

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் சார்பில் இந்திய பாரா ஒலிம்பிக் குழு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய 20வது மாநில சீனியர் பாரா தடகளம் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் ரஷ்ய, பெண்கள் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம், பெண்கள் குண்டு எறிதல் பிரிவில் இரண்டாமிடம் வென்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

News January 28, 2025

இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை – அன்புமணி 

image

சேலத்தில் பாட்டாளி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில்,”தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர்; அவர்களின் இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை; வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதியுடன் இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்” என தெரிவித்தார். 

News January 28, 2025

வீரபாண்டியார் இருந்திருந்தால் வன்னியருக்கு 10.5%

image

சேலம் சூரமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைத்திருக்கும் என்றும் அவர் இருந்திருந்தால் திமுக தலைமையிடம் சண்டையிட்டாவது பெற்று தந்திருப்பார் என்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு புகழாரம் சூட்டினார்.

News January 28, 2025

மீனவர்கள் கைது: இபிஎஸ் வலியுறுத்தல்

image

“வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

News January 28, 2025

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை 

image

சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளி தொழிலாளி பால்ராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவர்கள் தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்து வங்கிக் கடனை முறையாக திரும்ப செலுத்தவில்லை என்பதால், வங்கியாளர்கள் தொடர்ந்து பணம் கட்ட கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பால்ராஜ் குடும்பத்துடன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News January 28, 2025

சேலத்தில் இஸ்ரோ Ex விஞ்ஞானி முக்கிய பேச்சு

image

“மாணவர்கள் வகுப்பறை பாடங்களை தாண்டி அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு, விண்வெளித்துறைகளில் அதிக வேலைவாய்ப்பு உருவாகி கொண்டுள்ளது; வரும் காலத்தில் நிலவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கும் வாய்ப்பு உருவாகிக் கொண்டு உள்ளது. இது உலக அமைதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என சேலத்தில் இஸ்ரோ Ex விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டிளித்தார்.

News January 28, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் (ஜனவரி 28) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி பாட்டாளி மக்கள் கட்சி கலந்தாலோசனை கூட்டம். டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு –  இரும்பாலை ரோடு .2) காலை 10 மணி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி – கொண்டலாம்பட்டி 3) மாலை 5 மணி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் – கோட்டை மைதானம். 

News January 28, 2025

சேலத்தில் 35 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

சேலம் கோட்டம் சார்பில் முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலை ஆகிய பகுதிகளுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

News January 28, 2025

சேலம்: அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில், தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேலத்தில் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 08.02.2025 ஆகும்.

error: Content is protected !!