Salem

News February 1, 2025

சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் கட்டணம் உயர்வு 

image

சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று (பிப்.1) முதல் அமலுக்கு வருகிறது என சேலம் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து அறிவித்துள்ளனர். கட்டிங் மற்றும் சேவிங்கிற்கு ரூ.200, கட்டிங் மட்டும் ரூ.150, மாடல் கட்டிங் ரூ.180, சேவிங் மட்டும் ரூ.80 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

News February 1, 2025

சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட‌ செயலாளராக, ஆத்தூர் வெங்கடேசனை நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், மாவட்ட இணை செயலாளர் விஜய், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர்களாக சக்தி , அரவிந்த் குமார் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 31, 2025

சேலம் GH ஊசியால் பறிபோன உயிர்?

image

சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் பணியில் இருந்த மருத்துவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மருந்து செலுத்திய 6 நோயாளிகளின் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு நோயாளி இறந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் மறுத்துள்ளார்.

News January 31, 2025

சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் இ.ஆ.ப, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்<<>>, SHARE பண்ணுங்க

News January 31, 2025

கலெக்டர் அலுவலகத்தில் கீரைகள், காய்கறிகள்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.31) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதையொட்டி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் சார்பில் பாரம்பரிய காய்கறிகளின் விதைகள் மற்றும் கீரைகள், காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டார்.

News January 31, 2025

காவல் தெய்வம்: வெண்ணங்கொடி முனியப்பன்

image

சேலம், ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவில். வெண்ணங்கொடி என்ற ஒரு வகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் வெண்ணங்கொடி முனியப்பன் என பெயர் வந்தது. இங்கு அமாவாசை, பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், இங்கு ஞாயிறு தோறும் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். சேலம் மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. SHARE பண்ணுங்க

News January 31, 2025

எடப்பாடி அருகே விபத்து: 3 பேர் காயம் 

image

சேலம், எடப்பாடி அருகே ஆலமரத்துக்காடு புறவழிச்சாலை நான்கு ரோடு பகுதியில் இன்று (ஜன.31) காலை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சாலையோரம் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்த கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2025

48 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தரச் சான்றிதழ்

image

மருத்துவமனைகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தூய்மை, அறுவைச் சிகிச்சை கருவிகள், நவீன வசதிகள் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தர உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 48 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News January 31, 2025

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் (ஜன.31) இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8 மணி ஜே சி ஐ சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி. 2) காலை 10 மணிக்கு அருந்ததியர் இயக்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். 3) மதியம் 3 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஹோட்டல் அசோக் பார்க். 4)மாலை 6 மணிக்கு கோட்டை அழகிரிநாதர் திருக்கோயில் பஞ்ச கருட சேவை நடைபெறவுள்ளது.

error: Content is protected !!