India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறும் விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, சுமார் 6,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, துணை முதலமைச்சர் இன்று மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் பகுதியில் இருந்து கருப்பூர் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். நெத்திமேடு குமர கவுண்டர் தெருவை சேர்ந்த சீனிவாசன்,(31). இவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி சுரேஷிடம் விற்பனைக்கு வைத்திருந்த காரை பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதாக கூறி, ஆவணத்துடன் காரை திருடி சென்றார். அன்னதானப்பட்டி போலீசார், 3 மாதத்திற்கு பின் நேற்று அவரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டம்’ சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 92,998 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (34) இவருடைய 5 வயதான மகன் நேற்று மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரிசர்வ் பேங்க் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 13 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் (54), விருதுநகரைச் சேர்ந்து செல்வக்குமார் (52), கரூரை சேர்ந்த ராயன் (64), ஆகியோரை கைது செய்தனர்.

சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்துள்ளனர். அதன்படி அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ்-102, சாலை விபத்து உதவி-1073, தேசிய நெடுஞ்சாலை உதவி-1033 ஆகிய எண்களை உதவிக்கு அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் இன்று (14.09.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

தொடர் பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக மைசூரு- இராமநாதபுரம்- மைசூரு வாராந்திர சிறப்பு ரயில்களை (06237/06238) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. செப்.15- ஆம் தேதி முதல் அக்.28- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.