India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க <
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 16 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சீவி (25). நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் நரசிங்கபுரம் ரயில்வே கேட் அருகில் ரயில் வந்து கொண்டிருந்தது போது சஞ்சீவி மீது மோதியது, இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சீவி உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கும் அறை, சமையற்கூடம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்த சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் காலை உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் உணவின் சுவை, தரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கரூர்- வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில்வே பாலப்பணி நடப்பதால் வரும் பிப்.18ஆம் தேதி மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (16812) மயிலாடுதுறையில் வீரராக்கியம் ஸ்டேஷன் வரை மட்டும் இயங்கும். சேலம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16811) கரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும். சேலம்- கரூர் இடையே ரயில் ரத்துச் செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் செயல்படுத்தப்பட உள்ள சுற்றுலா வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் இன்று (பிப்.16) அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.<
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்க விழாவை முன்னிட்டு கோவையில் இருந்து புறப்பட்டு சேலம் வந்த காசி தமிழ்ச் சங்க சிறப்பு ரயிலுக்கு பா.ஜ.க.வின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் சசிகுமார், பா.ஜ.க.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் மாநில தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சிறப்பு ரயிலில் சென்றனர்.
சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 49 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 22 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதாசிவபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து(17). இவர் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தந்தை ராமசாமி குடி பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால், அடிக்கடி மகனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தந்தை கோபத்தில் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த பச்சமுத்து, நேற்று அதிகாலை காட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகில், எழும்பூர் இருந்து சேலம் நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.