Salem

News August 6, 2025

குறுதானிய சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

image

சேலம் மாவட்டத்தில் குறுதானிய சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ‘மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டத்தின்’ கீழ் மானியமாக 5500 ஏக்கருக்கு ரூ.88 லட்சம் வழங்கிடவும், 530 பேருக்கு குறுதானிய சிறுதளைகள் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிடவும், இலக்கு பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைவாழ் பழங்குடியின விவசாயிகளும் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம்.

News August 6, 2025

சேலம்: கூட்டுறவு வங்கிகளில் வேலை: ரூ.96,000 சம்பளம்!

image

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 16 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 6, 2025

சேலம்: நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி.
▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

News August 6, 2025

சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் 11ஆவது தேசிய கைத்தறி தினம் மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை(ஆக.7) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வனவாசி இரங்கண்ணன் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

சேலம்: களப் பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு

image

சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மாதாந்திர தொகுப்பு ஊதியத்தில் இரண்டு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நாளை(ஆக.7) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வுக்கு விபரங்கள் இணையதளத்தில் salemdapcu2023@gmail.com வெளியிடப்பட்டுள்ளது.

News August 6, 2025

சேலம்: ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சேலம் வழியாக ஹூப்ளி – இராமநாதபுரம் – ஹூப்ளி ரயில்கள் (07355/07356) இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆக.09 முதல் ஆக.31 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து இராமநாதபுரத்திற்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் இராமநாதபுரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News August 6, 2025

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது

image

சேலம்: மேட்டூர் அணைக்கு இன்றைய(ஆக.6) காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 7,769 கனஅடியிலிருந்து 7,591 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக சரிந்துள்ள நிலையில், நீர் இருப்பு 91.56 டி.எம்.சியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

News August 6, 2025

சேலத்தில் கிராம உதவியாளர் வேலை! உடனே APPLY

image

சேலம் மக்களே.., கிராம உதவியாளர் பணிக்கு காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நாளையே(ஆக.7) கடைசி நாள். ஆக, உடனே விண்ணப்ப படிவத்திற்கு <>இங்கே கிளிக் பண்ணுங்க.<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 6, 2025

சேலம்: பள்ளி மாணவன் பலி ; 5 பேர் சஸ்பெண்ட்!

image

சேலம்: மேட்டூர் அடுத்த பாலமலை ஊராட்சி பத்திரமாடுவைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மகன் பார்த்திபன். அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ஆம் தேதி காலை இவர் நண்பர்களுடன் பள்ளி அருகே உள்ள கிணற்றில் குளித்த போது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

News August 6, 2025

சேலம்: காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

image

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக வரும் போதை பொருட்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புளியம்பட்டி பகுதியில் ஓமலூர் போலீசார் கன தவாணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற வாகனத்தை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். காரில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!