India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT
பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி சிறப்பு ரயில்கள் (07331/07332) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.14- ஆம் தேதி ஹூப்ளியில் இருந்து காரைக்குடிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.15- ஆம் தேதி காரைக்குடியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநலத்துறை சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் தலைமையில் உறுதி மொழியை வாசிக்க அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள், செவிலியர் மாணவர்கள், அதனை ஏற்றுக் கொண்டனர். போதைப் பழகத்தால் ஏற்படும் உடல், மன, சமூக பாதிப்பு குறித்து மருத்துவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இன்று ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொலி காட்சியின் வாயிலாக சென்னையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் பங்கேற்றார்.
பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி சிறப்பு ரயில்கள் (07331/07332) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.14- ஆம் தேதி ஹூப்ளியில் இருந்து காரைக்குடிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.15- ஆம் தேதி காரைக்குடியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
சேலம் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ முகாமில் சுமார் 5,300 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் 1,436 பேர் பயனடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு தேவையான இலவச மருத்துவ பரிசோதனைகளுடன் சிகிச்சையையும் மருத்துவர்கள் அளித்தனர்.
சேலம் மக்களே பூட்டான் சுகாதார மருத்துவமனையில் காலியாக உள்ள 100 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.sc Nursing டிகிரி படித்திருக்க வேண்டும். இதற்கு, மாதம் ரூ.65,246 முதல் 86,046 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், இந்த லிங்கை <
சேலம் ஆகஸ்ட் 11 இன்றைய முக்கிய நிகழ்வுகள்;
▶️காலை 10 மணி வாராந்திர குறைத்தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆபீஸ்.
▶️காலை 10 மணி ஆணவ கொலை தடுக்க கடும் சட்டம் இயற்ற கோரி விசிக ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
▶️காலை 11:30 மணி தமிழ் மக்கள் கட்சியினர் ரேஷன் அட்டை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
▶️பகல் 12 மணி செல்வகணபதி மக்கள் சேவா அறக்கட்டளை தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
சேலத்தில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<
Sorry, no posts matched your criteria.