India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் நாளை ஆக.13 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
♦️ அஸ்தம்பட்டி மண்டலம் அண்ணாமலை திருமண மண்டபம் கன்னங்குறிச்சி.
♦️ துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர்.
♦️ ஆத்தூர் எல் ஆர் சி திருமண மண்டபம் கோட்டை.
♦️ ஓமலூர் பத்மவாணி மகளிர் கல்லூரி கோட்டகவுண்டம்பட்டி.
♦️ கொங்கணாபுரம் சுய உதவி குழு கட்டிடம் கச்சுப்பள்ளி.
♦️ மகுடஞ்சாவடி ஆர் கே திருமண மண்டபம் காக்காபாளையம்.
சேலம் ஆகஸ்ட் 12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்
▶️ காலை 9 மணி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம், இரும்பாலைரோடு தனியார் மண்டபம்.
▶️காலை 10:30 மணி தாயுமானவர் திட்டம் துவக்க விழா கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு.
▶️ காலை 10 மணி வீராணம் கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் ஸ்டாலின் முகாம்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறு தானிய உணவகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள அனுபவமுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் விவரங்களை மாவட்ட மகளிர் திட்டம் இயக்குனர் அலுவலகத்தில், ஒப்படைக்க வேண்டும். வருகின்ற 18ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மக்களே.., மேட்டூர் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ போன்ற இடங்களில் சிறுதானிய உணவகம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேரிலோ, தபால் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வருகிற ஆக.18ஆம் தேதியே கடைசி நாள். உடனே தொழில் முனையும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் நாளை (ஆக.12) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் 08.25 மணிநேரம் தாமதம் காரணமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான இலக்கியா ஸ்ரீ-க்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருநம்பியான கார்த்திக் என்பவருக்கும், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சுயமரியாதை திருமண நிலையத்தில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. அங்கிருந்தவர்கள் திருமண தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல்களை மக்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️வீராணம் – கோவிந்தக்கவுண்டர் சுசீலா திருமண மண்டபம் வீராணம் ▶️தாரமங்கலம் – சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் மற்றும் நெசவிளக்கு கிராம ஊராட்சி வள மைய கட்டிடம்▶️ காடையாம்பட்டி – வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மகாலட்சுமி நகர் மற்றும் கொங்குபட்டி கௌரநாயுடு சமுதாயக்கூடம்.
Sorry, no posts matched your criteria.