India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கி வேலை வாய்ப்புகள்:
1)இந்தியன் வங்கி வேலை: https://indianbank.bank.in/career/
2)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை: https://ibpsonline.ibps.in/iobjul25/
3) SBI வங்கியில் வேலை: https://sbi.bank.in/web/careers/current-openings
4) கனரா வங்கி வேலை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSco5TvC92XJfhxRFxKMbIG-vY62qm-fgi81mdCML8SfgGBbFA/viewform (SHARE IT)

சேலம் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (செப்.26) முதல் வரும் செப்.29- ஆம் தேதி வரை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேட்டூர் அணையில் இன்று (செப்.26) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7645 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.020 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 91.915 டி.எம்.சி.யாக குறைந்துள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளுக்குப் பயணிக்கிறார். விஜய் வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சேலம் செப்டம்பர் 26 இன்றைய முக்கிய நிகழ்வுகள்1) சர்வதேச காதுகேளாதோர் மற்றும் சைகை மொழி பேசுவோர் வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி ஆட்சித் தலைவர் துவக்கி வைப்பு 2) ஓமலூர் தாரமங்கலம் பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பல்வேறு கட்டிடங்களை நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார் 3)மதியம் 3 மணி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்

சேலம்: வீரபாண்டி பாலம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது.இதனால் கோவிந்தராஜின் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் கதிர்வேல். இவர் வீட்டின் அருகே வசிக்கும் மூன்று வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள் இருவருக்கும் பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் தாய் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கதிர்வேலை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: ஏற்காடு செந்திட்டு பகுதியை சேர்ந்த கனகராஜ் (30) என்பவர் நேற்று முன்தினம் இரவு காரிப்பட்டியில் உள்ள மனைவியை அழைத்து செல்வதற்காக சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி கருமாபுரம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்கும்போது சேலம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.