India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சேலம்-சென்னை-சேலம் இண்டிகோ விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு விமான கட்டணம் ரூ.4,948 ஆகவும், சென்னையில் இருந்து சேலத்திற்கு ரூ.7,283 ஆகவும் கட்டணம் நிர்ணயம் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் மாலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். அவர் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்து, பின்னர் மாநாடு நடைபெறும் நேரு கலையரங்கிற்கு செல்கிறார்
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலத்துறை சார்பில் போதை பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதந்தோறும் புறநோயாளிகள் பிரிவில் சுமார் 760 பேர் பயன்பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 50 முதல் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தொப்பூர், பெரியார் பல்கலை., நத்தக்கரை, மேட்டுப்பட்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்வார்கள்.
சேலம் வழியாக இயக்கப்படும் கொல்லம்- ஹைதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (07193/07194) வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹைதராபாத்-கொல்லம் ரயில் ஆக.16 முதல் அக்.11 வரையும், கொல்லம்-ஹைதராபாத் ரயில் ஆக.18 முதல் அக்.13 வரையும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தி கொள்ள சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம், அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சேலம்,கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விண்ணபிக்க <
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும்.இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல காப்பக நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.