India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் சேலம் சரகத்தில் கார்களின் விற்பனை வழக்கத்தை விட 20% விற்பனை அதிகரித்துள்ளதாக கார் ஷோரூம்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் தீபாவளி பண்டிகையில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் கார்களின் விலை ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1.50 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் கேரம் போர்டு,செஸ் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படும். பரிசுத் தொகை ஒரு லட்சம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

மேட்டூர் அடுத்த புதுசாம்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கரூர் ரயில்வே துறையில் கேங் மேஸ்திரி- ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீநாத் (16), கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த ஸ்ரீநாத் உடலுக்கு சேலம் எம்பி செல்வ கணபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

சேலம் செப்டம்பர் 29 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 9 மணி உலக இருதய தினத்தை ஒட்டி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி
2)காலை 10 மணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் 3)காலை 11 மணி -வீடு இல்லாதவர் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் 4)காலை 11 மணி இந்திய குடியரசு கட்சி நிதி நிறுவனம் மோசடி கண்டித்து ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்

புரட்டாசி மாதம் என்பதால் சேலம் மாநகரில் உள்ள அசைவ உணவகங்களில் விற்பனை சரிந்துள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை தினமான நேற்று சில்லிசிக்கன், சிக்கன் ரைஸ், மட்டன் ப்ரை, சிக்கன் ப்ரை, போட்டி, பிரியாணி போன்ற உணவுகளின் விற்பனை 40% சரிந்ததால் உணவகங்களின் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல், சைவ உணவகங்களில் விற்பனை வழக்கத்தை விட 30% அதிகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<

கரூர் தவெக பிரச்சாரத்தில் 40 நபர்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (செப்.29) சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி வளர்ச்சி நிறுவனம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பட்டறைகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது என தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொது நலச்சங்க மாநிலத் தலைவர் ஜெகன் அறிவித்துள்ளார்.

சேலம் மாநகரம் வீராணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சின்னனூர் சுடுகாடு அருகே செப்.17-ல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள்-523 மற்றும் 1.1/4 கிலோ கஞ்சா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கபிலேஷ், தினேஷ் மற்றும் பிளஸன் ஆகிய மூன்று பேரையும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக வீராணம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்காட்டைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளிகள் சர்மா மற்றும் சுரேஷ் ஆகிய இருவர், நேற்று இரவு தங்கள் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏற்காடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அடிமலைபுதூர் அருகே எதிர்பாராத விதமாகச் சாலையோரம் வாகனம் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வீராணம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.