India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விபத்து காப்பீடு சிறப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் நடந்து வருகிறது. பிப்.28-ம் தேதியுடன் சிறப்பு முகாம் நிறைவடைய விருந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரூ.599 காப்பீடு தொகை செலுத்தி ரூ.10 லட்சமும்,ரூ.799 செலுத்தி ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
வீரகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ கருப்பண்ணன், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் வியாபாரியிடம் மாமுல் கேட்ட வீடியோ வைரலானது. இதனை எடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயில் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்கு 2500 ரூபாய் தர வேண்டும் என எஸ்ஐ கருப்பண்ணன் கேட், கடைக்காரர் 1500 ரூபாய் தருவதாக பேசிய வீடியோ வைரல் ஆனது.
சாலை பாதுகாப்பு குறித்து போலீசார், அரசு அலுவலகர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு செல்வது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்காத 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 137 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல்துறை வாடிக்கையாளர் வசதிக்கு, காகிதமில்லா ஆதார் அடிப்படையிலான இ-கே.ஒய்.சி எனும் அங்கீகார செயல்முறை பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் கே.ஒய்.சி. விபரங்களை மேம்படுத்திக் கொள்ளுதல், நிதி பரிவர்த்தனை என முக்கிய பரிவர்த்தனைகளை ஆதார் அடிப்படையில் கைரேகை மட்டும் வைத்து அஞ்சல்நிலையங்களில் மேற்கொள்ளலாம் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர்
சேலம் மார்ச் 3 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ▶️காலை 10:30 மணி பாரத வெண்புறா மக்கள் சேவை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம். ▶️11 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️ காலை 11:30 மணி ஜெய் ஜவான் ஜெய் கிஷான் மஸ்தார் பெடரேஷன் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 5 மணி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டைமைதானம்
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலத்தில் மட்டும் 149 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
தமிழக முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 20,206 மாணவர்களும் ,17732 மாணவிகளும் என 37,938 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 3,500 மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் . தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் நவீன் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள் நேற்று மாணவியை காரில் கடத்தி சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது தலைவாசல் காவல் துறையினர் புகாரின் அடிப்படையில் காரில் தப்பிய காதலன் நவீன் குமார் மற்றும் மாணவியை பிடிக்க ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி செல்போன் வாயிலாக நூதன முறையில் மோசடி பேர்வழிகள் ஏமாற்றும் முறைகள் குறித்து சமூகவலைதளங்கள் விழிப்புணர்ச்சி செய்து வருகின்றனர். போலி வாடிக்கையாளர் சேவை மையம் தொண்டு நிறுவனம் போலி கணக்கெடுப்பு, மிஸ்டு கால் அழைப்பு என நடைபெறும் மோசடி குறித்து விளக்கியுள்ளனர்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச்.02) மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. * ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.