Salem

News October 2, 2025

சேலம் அருகே விவசாய கிணற்றில் சடலம்!

image

சேலம்: ஓலப்பாடி தென்னம்பிள்ளையூர் பகுதியில் விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, அதே பகுதியை சேர்ந்த 70 வயதான முதியவர் மணி என்பதும் நடந்து வந்த போது தவறி விழுந்து இறந்து இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் சம்பவம் குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 2, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 1, 2025

சேலம்: மாநில அளவிலான போட்டிகளுக்கு புறப்பட்டனர்

image

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் மாநில அளவிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, பேருந்து மூலம் புறப்பட்டனர். அவர்களை ஆட்சியர் கொடியசைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தார். திரளான மாணவ மாணவிகள் பங்கேற்று சென்றனர்.

News October 1, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.01) சாலைகளில் பூசணிக்காய் முதலியவற்றை உடைத்து விபத்துக்கு வழி வகுக்க வேண்டாம், சாலை பாதுகாப்பை கேள்விக் குறியாக்காமல், சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம், என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News October 1, 2025

சேலம்: மின்சார துறையில் வேலை – ரூ.59,900 வரை சம்பளம்!

image

சேலம் மக்களே..தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) – கள உதவியாளர் வேலைவாய்ப்பு!
சேலம் மாவட்டம் மற்றும் மற்ற பகுதிகளுக்கேற்ப பணியிடங்கள்
1)மொத்த காலியிடங்கள்: 1,794
2)கல்வித்தகுதி: ITI (ஏதேனும் துறையில்)
3)சம்பளம்: ரூ.18,800 – ரூ.59,900 வரை
4)விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 02-10-2025
5)விண்ணப்பிக்கவும், முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

News October 1, 2025

சேலம்: போலி ஆன்லைன் விளம்பரங்கள் எச்சரிக்கை!

image

சேலம் மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “MESA SALE”, “Limited Offer” போன்ற போலி விளம்பரங்கள் ஆன்லைன் தளங்களில் பரவி வருகின்றன. இவற்றை நம்பி பணம் செலுத்துவது நிதி இழப்புக்கு காரணமாகும். குடிமக்கள் எந்தவொரு விளம்பரத்தையும் சரிபார்த்து பின்னரே பரிவர்த்தனை செய்ய வேண்டும். மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930-ஐ அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

News October 1, 2025

சேலம் கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 4 மையங்களில் எழுத்துத் தேர்வு வரும் அக்.11- ஆம் தேதி நடைபெறுகின்றன. சுமார் 4,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் அக்.06- ஆம் தேதி இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

News October 1, 2025

சேலத்தில் 393 பேரின் லைசென்ஸ் ரத்து!

image

வாகன விபத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம், தர்மபுரியில் கடந்த 9 மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 393 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுப்போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 1, 2025

சேலம்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News October 1, 2025

சேலத்தில் 393 பேரின் லைசென்ஸ் ரத்து!

image

வாகன விபத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம், தர்மபுரியில் கடந்த 9 மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 393 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுப்போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!