India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அருகே உள்ள SAIL (இரும்பாலை வாளாகம்) நிறுவனத்திற்கும் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் சேலம் மாநகர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பாலை வளாகத்திற்கு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேவையின்றி அலாரம் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேரை ஆர்.பி.எஃப். போலீசார் கைது செய்துள்ளனர். பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் மிகவும் கவனமுடன் பயணிகள் பயணிக்க வேண்டும். பயணிகள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை. இதே நிலை தொடரும் பட்சத்தில் கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனால் இங்கு வந்து வழிபாடு செய்தால் அம்மை, உடலில் உள்ள குறைபாடுகள், குழந்தை வரம் மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10:30 மணி சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி நீரேற்று நிலையத்தில் அமைச்சர் ஆய்வு ▶️காலை 11 மணி அரசு மருத்துவமனை முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பு ▶️காலை 10 மணி சிவராஜ் சித்த வைத்திய கல்லூரியில் பெண்கள் தின கொண்டாட்டம் ▶️ காலை11 மணி ஜெயராம் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கம்▶️மாலை 6 மணி ஈஸ்வரன் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்
கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 4.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 6 பேரும், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தலா ஒருவரும் என மாநில முழுவதும் 43 பேர் உயிரிழந்தனர் எனவும், இறந்தவர்களில் 22 பேர் தடுப்பூசி முழுமையாக செலுத்தாமல் இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.12 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது தொல்லை இருந்தாலும், கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன், கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி மற்றும் அருண் நேரு எம்.பி, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் ஆகிய பேச்சாளர்களும் இணைந்து பங்கு பெறுவர் என தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.