India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் இதுவரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் 8 நடத்தப்பட்டுள்ளது. இதில் 5,500 ஆண்கள், 7,269 பெண்கள் என மொத்தம் 12,769 பயனடைந்துள்ளனர். இதில் 10,111 நபர்களுக்கு ரத்தப் பரிசோதனையும் 8,060 நபர்களுக்கு இசிஜி பரிசோதனை, 1,352 நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை,1009 எக்ஸ் ரே செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (அக்.04) சேலத்தில் உள்ள அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட 13 உழவர்சந்தைகளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த 315.10 டன் அளவிலான பூக்கள், காய்கறிகள், பழங்களை 75,143 பேர் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் ஒரே நாளில் ரூபாய் 1 கோடியே 31 லட்சத்து 69 ஆயிரத்து வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.04) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.04) “NEVER CROSS ROAD AT BENDS” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டு தரும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2540 குரூப் 2 பணிக்கான தேர்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. பணி நியமன கலந்தாய் வரும் 6ம் தேதி முதல் அனைத்து மாவட்ட சிஇஓ அலுவலங்களிலும் நடைபெறும். சேலம் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ரூபாய் 11.38 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய டிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளோ, மற்ற சங்கங்களோ, சமூக ஆர்வலர்களோ, பொதுக்கூட்டம் நடத்தவோ பேரணி மேற்கொள்ளவோ, உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவோ குறிப்பிட்ட நாட்களுக்கு 5 நாட்கள் முன்னதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வலியுறுத்தியுள்ளார். ஐந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்

சேலம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.