India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள செங்கரடு பகுதியில் வசித்து வந்த கணேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 18) காலமானார். தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மகன் மணிகண்டன், தனது தந்தையின் கனவை நிறைவேற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு உறவினர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து வரும் மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 260 வாகனங்கள் மற்றும் 400 கடைகளிலும், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.
சேலம், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்திய 41 வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனை அடுத்து 41 வாகனங்களை நாளை காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. சேலம் சர்க்கார் கொல்லப்பட்டிஉணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏலம் நடைபெறும்.
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியில் 95 இருக்கைகளுடன் கூடிய, டோம் தியேட்டர் (DOME THEATER) கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பார்வையாளரைச் சுற்றி, 360 டிகிரியிலும் காட்சி ஓடும் வகையில் இந்த தியேட்டர் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த திரையரங்கிற்காக திரைப்பட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சேலம், அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி ( 43), தனது மகள் அட்சயா, மகன் கவியரசன் ஆகியோருடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்களுக்கு சொந்தமான நிலம் காடையாம்பட்டி இருப்பதாகவும், இதனை விற்கவிடாமல் தனது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 260 வாகனங்கள் மற்றும் 400 கடைகளிலும், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.
சேலம் மாவட்ட ஊரக பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 17 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். தற்போது அண்ணாமலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் அனைவரையும் போலீசார் விடுவிட்டனர்.
சேலம் : மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதுபடி இன்று(மார்ச் 17) அதிக தள்ளுபடி போன்ற விளம்பரங்களை நம்பி அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் விற்பனை தளங்களில், உங்களது வங்கி சார்ந்த தகவல்களை சேமித்து வைக்கவோ அவற்றை நம்பி உங்கள் பணத்தை இழந்து விடவோ வேண்டாம். என்கிற போஸ்டை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.