Salem

News October 9, 2025

சேலத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா பேட்டி!

image

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கஸ்தூரிராஜா, “என்னுடைய மகன் செல்வராகவன் தமிழில் ஜீவி பிரகாஷ் உடன் இணைந்து ஒரு படத்திலும், மேலும் நான்கு படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்று ஒரு சிலர் வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர். அவருக்கு அதிகப்படியான பட வாய்ப்பு வருவதாக” கஸ்தூரிராஜா பேட்டியளித்தார்.

News October 9, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகராட்சியில் (06.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News October 9, 2025

சேலம்: 10-வது படித்தால் அரசு வேலை ரெடி!

image

சேலம் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் தமிழ்நாடு (TN) உரிமைகள் திட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1096 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 14.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News October 9, 2025

BREAKING: சேலம் தவெக மாவட்ட செயலாளர் கைது

image

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில், சேலம் கிழக்கு தவெக மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்தனர். பிரச்சாரத்தின் போது காயம் அடைந்தவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News October 9, 2025

சேலம் மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

சேலம் மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு இணையவழி நிதி பரிவர்த்தனை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முடிந்தவுடன் “Logout” செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது இணைய மோசடிகளைத் தவிர்க்க முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். நிதி மோசடிகள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

News October 9, 2025

சேலம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849-24299 அழைக்கலாம். சென்னை மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

சேலம்: நாய் வளர்ப்போர் கவனத்திற்கு!

image

உலக தத்தெடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சேலம் விலங்குகள் நல ஃபவுண்டேஷன் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நாளை மறுநாள் (அக்.11) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நோய்களுக்கான தொற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 93441-55396 என்ற எண்ணை அழைக்கலாம்.  

News October 9, 2025

நவம்பர் 17 கடைசி நாள் ஆட்சியர் தகவல்

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கான தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக tamilvalarchithurai.org/agavai/பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார் இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்

News October 9, 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!

image

சேலம் மாவட்டத்தில் 2025-2026-ம் ஆண்டிற்கான 11, 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் அக்.14- ஆம் தேதியன்று காலை 10.00 மணியளவில் நடத்தப்படுகிறது. தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் அக்.15- ஆம் தேதியன்று சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 0427-2417741 தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

News October 9, 2025

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் விசாரணை முகாம்!

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பொது பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சிறப்பு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!