India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் 12 தேர்வு மையங்களில் இன்று (ஆக.31) நடந்த டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் 4,447 தேர்வர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் மொத்தம் 6,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,812 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.31) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று (ஆக.31) மாலை முதல் தற்போது வின்சென்ட், அண்ணா பூங்கா, 4 ரோடு, மத்திய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, கன்னங்குறிச்சி, பட்டைக்கோவில், அம்மாப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கீழே கமெண்ட் செய்யுங்கள்!
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம்ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல். NTES மூலமாக திருவாரூரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <
சேலம் மாநகரில் இன்று (ஆக.31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் மாநகராட்சியில் 31.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் துணைவியாரும், சேலம் கிழக்கு மாவட்டக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் வீரபாண்டி ஆ.பிரபுவின் தாயாருமான லீலா ஆறுமுகம் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
தகவலறிந்ததும், அன்னையை இழந்து தவிக்கும் தம்பி ஆ.பிரபு தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது ஆறுதலைத் தெரிவித்தேன். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
செப்.01- ஆம் தேதி லோக்மான்ய திலக் டெர்மினஸ்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (11013) மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் ஓசூர், தருமபுரி ரயில் நிலையங்களில் நிற்காது. பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மெண்ட், பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மாநகர் காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பை முதன்மையாகக் கருதி பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பயணத்திற்கு முன் வாகனத்தைச் சரிபார்த்தல், முழுக்கவச ஹெல்மெட் அணிதல், வேக வரம்புகளை கடைபிடித்தல், பிரதிபலிப்பு ஜாக்கெட் மற்றும் வெளிர் நிற உடைகள் அணிதல், மேலும் வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் பேணுதல், போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.