India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமான சேவையும், பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர் விமான சேவையும் உள்ளது. விமானங்களின் இயக்க நேரம் வரும் 26ம் தேதி முதல் குளிர்காலத்திற்கான இயக்க நேரமாக மாற்றி அமைப்பதாக சேலம் விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 26ம் தேதி முதல் சேலத்தில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மாலை 4.55 மணிக்கு சென்றடையும்.

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <

தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி, கொல்லத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாககேஎஸ்ஆர் பெங்களூரு-தூத்துக்குடி இடையே வரும் 17, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சேலம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். <

சேலம்: கன்னங்குறிச்சி மின் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் துரைசாமி (55). இவர் நேற்று கன்னங்குறிச்சிக்குட்பட்ட குமரன் நகர் மின்மாற்றியில் (Transformer) மேலே ஏறி பராமரிப்புப் பணி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, மேற்புறம் சென்றுகொண்டிருந்த கம்பியில் இவருடைய கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல்லில் வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகிய இருவரும் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம் அக்டோபர் 14 இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்1) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் 2) சேலத்தாம்பட்டி தேன்மொழி மண்டபம் பனங்காடு 3)அயோத்தியாபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகம் டி. பெருமாபாளையம் 4)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மண்டபம் வடக்கு நாடு 5)ஓமலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியேரிபட்டி 6)மேச்சேரி கே வி எஸ் மஹால் ஓலைப்பட்டி

சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் அம்மாபேட்டை சேர்ந்த மோகனசுந்தரம். இவர் நீதிமன்றப் பிணையாணையில் வெளியே வந்தார். மீண்டும் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இரண்டு வருட காலமாக தேடி வந்த நிலையில் இன்று அம்மாபேட்டை பகுதியில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.