Salem

News October 22, 2024

அக்.25- ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம்  ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற அக்.25- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.  விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

News October 22, 2024

சேலம்: அரசு பள்ளி வளாகம் நீரில் மூழ்கிய அவலம்

image

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று மாலை பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.  இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

News October 22, 2024

தவெக மாநாடு வெற்றி பெற இபிஎஸ் வாழ்த்து

image

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

News October 22, 2024

சேலத்தில் விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கிடும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதார் அட்டை, குடும்ப அட்டை சான்று நகலுடன் சேலம் ஆட்சியரகத்தில் அறை எண்.109-ல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

சேலத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

image

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் கிராமம் கொத்திக்குட்டை ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

News October 22, 2024

அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்!

image

“உதயநிதி ஸ்டாலின் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் தான் உண்மையான தேர்தல், பைனல் மேட்ச்; அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். தி.மு.க. விளையாட்டை ஆரம்பித்துவிட்டீர்கள்; அந்த விளையாட்டுக்கான கோப்பையை அ.தி.மு.க. தான் வெல்லும்” என்று சேலம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

News October 22, 2024

சேலம் வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக இன்று (அக்.22) சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகைப்புரிந்த நிலையில், அவரை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து, ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

News October 22, 2024

திமுக கூட்டணியை நம்பி உள்ளது: இபிஎஸ்

image

சேலம் கொங்கணாபுரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தி.மு.க. கூட்டணியை மட்டும் நம்பி உள்ளது. கூட்டணி தலைவர்கள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும். திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்தது? சேலம் மாவட்டத்தில் ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா இன்றும் திறக்கப்படவில்லை” என்றார்.

News October 22, 2024

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 18,094 கன அடியிலிருந்து 17,586 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 98.560 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 62.991 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 7500 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 22, 2024

சேலம் வரும் முதல்வர் ஸ்டாலின்

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(22.10.24) நாமக்கல்லுக்கு வருகை தருகிறார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதுடன், அரசு விழாவிலும் பங்கேற்கிறார். இதற்காக காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் விமான நிலையம் வரும் முதல்வர், சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.