India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்- கொச்சின் (LLR514), கொச்சின்- சேலம் (LLR515) விமான சேவையை இன்று (செப்.04) அலையன்ஸ் ஏர் (Alliance Air) விமான நிறுவனம் ரத்து செய்துள்ளதாக சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணித்த 17,643 நபர்களிடமிருந்து 1.03 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரி கூறுகையில் ரயிலில் டிக்கெட் இன்றியும் முறைகேடாக பயணம் செய்வது விதிமீறிய செயல் மீறி தொடர்ந்து ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை தெரிவித்தார்.
சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வருகிற 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி வெளியூர்களில் படிப்பவர் மற்றும் பணிபுரிபவர்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சேலம் கோட்டம் சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மேட்டூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் டி63 உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் செப்.06ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கும், செப்.08ம் தேதி கோவையில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122
சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும் , கர்நாடகா மாநிலத்தில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே. செப்.04, 06 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும் , செப்.05, 07 ஆகிய தேதிகளில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சேலம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016- ல் ரியோடிஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், 2021- ல் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்திய நிலையில், தற்போது பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் சேலம் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் வேகமாக சென்றதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.