Salem

News September 5, 2024

விஜயின் ‘G.O.A.T.’ சேலத்தில் போலீஸ் பாதுகாப்பு

image

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் ‘THE G.O.A.T.’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News September 5, 2024

சேலம்: 39 ஆசிரியர்களுக்கு விருது

image

முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து இந்நாளில் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

நடப்பாண்டில் சேலம் மண்டலத்தில் 39 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.

News September 5, 2024

‘G.O.A.T’ படத்தில் சேலம் மாவட்ட தலைவர்!

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘G.O.A.T.’ திரைப்படம் இன்று (செப்.05) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தில் தவெகவின் சேலம் மாவட்டத் தலைவர் தமிழன் ஆ பார்த்திபன் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

News September 5, 2024

சேலம்: உள்ளூர் திட்டக் குழும மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

சேலம் மாவட்ட உள்ளூர் திட்டக் குழும மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தலைமையில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் ஆ.ஷஹானா, உள்ளூர் திட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News September 5, 2024

சேலம்: மாணவனை தாக்கி செல்போன், பைக் பறிப்பு

image

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடியைச் சேர்ந்தவர் மாதவன். கல்லூரி மாணவரான இவர் அவரது நண்பர்களை பார்க்க ஆட்டையாம்பட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து தாக்கிய இருவர் அவரிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறித்துக்கொண்டனர் . புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த ரகுபதி மற்றும் மாதவன் ஆகியோரை ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

News September 4, 2024

சேலத்தில் ‘G.O.A.T’ டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘G.O.A.T’ திரைப்படம் நாளை (செப்.5) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில திரையரங்குகளில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

News September 4, 2024

சேலத்தில் பஞ்., தலைவரை நீக்கிய வழக்கு: அதிரடி உத்தரவு

image

பைத்தூர் பஞ்சாயத்து தலைவரை பதவியிலிருந்து நீக்கிய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 8 வாரத்தில் ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பஞ்சாயத்து தலைவரை பதவியிலிருந்து நீக்கிய அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு.

News September 4, 2024

சேலம் பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி

image

சேலம் மாவட்டம், குப்பனூர் வெள்ளையம்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News September 4, 2024

சேலத்தில் முதல் முறையாக வான் அறிவியல் கண்காட்சி

image

சேலத்தில் முதல் முறையாக இஸ்ரோ மற்றும் டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் வான் அறிவியல் கண்காட்சி புதிய பேருந்து நிலையத்தில் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறுகிறது. இதில் வானியல் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இஸ்ரோவின் செயல்பாடுகளை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

மாரியப்பனுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

image

பாரா ஒலிம்பிக்கில்
வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 3 நகரங்கள், 3 பாராலிம்பிக் தொடர்கள், 3 பதக்கங்கள்; மீண்டும் சாதித்துவிட்டீர்கள் மாரியப்பன்; ரியோ, டோக்கியோ, பாரிஸ் என பாராலிம்பிக்கில் பதக்கங்களைக் குவித்ததற்கு வாழ்த்துகள்; உங்கள் அசைக்க முடியாத திறமையை உலகம் கண்டது; வாழ்த்துகள் சாம்பியன் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!