India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின்கீழ் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் இன்று (அக்.06) நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதில் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், கல்விக்கடன் உள்ளிட்ட ரூ.17.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில், ஆட்சியர், சேலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகைக்கு நாளை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை தர உள்ளதால் எடப்பாடி நகர கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி நகர செயலாளர் முருகன் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 8,268 கன அடியிலிருந்து 12,713 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 92.600 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 55.673 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக, ஜாகீர் அம்மாப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, முனியப்பன் சிலைக்கு பாதியளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய சேலம் உடையாப்பட்டி கைலாஷ் மான்சரோவர் சிபிஎஸ்இ பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி மோஷிகா, கோப்பையும் மற்றும் சான்றிதழையும் பெற்றார். மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எண்ணெய் ஏற்றி சென்ற வாகனம் இன்று விபத்துக்கு ஆளான நிலையில், அந்த வழியே அரசு நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தைச் சீர் செய்திட அறிவுறுத்தினார்.
விளையாட்டுத்துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்; அதேபோல் நம்பிக்கைதான் மூலதனம்; எவ்வளவு தடைகள் வந்தாலும், இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். என்னைப்போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும்” என சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64- வது ஆண்டு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் பேசினார்.
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை விதிகளை மீறி சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஏற்காடு, மேட்டூர், தாரமங்கலம், சங்ககிரி, ஆத்தூர்தலைவாசல், சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டதாக 100 மருந்துக் கடைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சேலம் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் மற்றும் காந்தி ஆகியோரின் பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டிகள் முறையே அக். 22, 23, 24 ஆகிய நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி சேலம் அரசுக் மகளிர் கலைக் கல்லூரியில் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.