Salem

News October 10, 2024

“நீட் தேர்வு ரத்துக்கு அரசு எதுவும் செய்யவில்லை”

image

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நீட் தேர்வை ரத்துச் செய்ய திமுக அரசு எதையும் செய்யவில்லை, நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுக-வே அதை ரத்துச் செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது. திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம் என பேசினார்.

News October 10, 2024

மாணவி தற்கொலை: இ.பி.எஸ் நேரில் ஆறுதல்

image

எடப்பாடியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு மருத்துவ கலந்தாய்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இதில் மனம் உடைந்த புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்ற அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தியதுடன், மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

News October 10, 2024

பள்ளி மாணவி தற்கொலை: உதயநிதி இரங்கல்

image

எடப்பாடியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு மருத்துவ கலந்தாய்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இதில் மனம் உடைந்த புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து Xதளத்தில், 7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பதிவிட்டுள்ளார்.

News October 9, 2024

சேலம்: சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

image

கெங்கவல்லி மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்த நிலையில் இன்று காலை மணக்காடு பகுதியில் சிறுத்தை கால்தடம் உள்ளதை பார்த்து பொதுமக்கள் அச்சம் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குட்டியுடன் சிறுத்தை உலா வருவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

News October 9, 2024

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவிகள்

image

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்களுக்கு குறைந்த வட்டியில் டாப்செட்கோ கடனுதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 8 நகர கூட்டுறவு வங்கிகள், 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் டாப்செட்கோ கடன் மேளாக்கள் நடைபெறவுள்ளன.

News October 9, 2024

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள் தயார்

image

வடகிழக்கு பருவமழையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பணிகள் முற்றிலும் தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 9, 2024

வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வீட்டில் உள்ள நூலகத்தில் நூல்களின் எண்ணிக்கை விவரங்களுடன், சுய விவரங்களை குறிப்பிட்டு அக்.20- க்குள் newdlosalem2023@gmail.com – க்கும்,மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம்,சேரராஜன் சாலை, அஸ்தம்பட்டி,சேலம் – 636007-க்கும் விண்ணபிக்கலாம்.

News October 9, 2024

ரயிலில் ஓசி பயணம் ரூ. 6 கோடி அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் கடந்த ஏப்ரல், செப்டம்பர் (2024) மாதங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் ரயில்களில் சோதனை நடத்தினர். அதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 79 ஆயிரத்து 6 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 6 கோடியே 28 லட்சத்து 48 ஆயிரத்து 869 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News October 9, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை இருக்கு

image

தமிழகத்தில் அடுத்த 6 நாளுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்திற்கும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த 2 தினங்களாக சேலத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வந்ததால், புறநகர் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

News October 9, 2024

தேவர் ஜெயந்தி விழா: எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு!

image

அக் 29, 30ஆம் தேதிகளில் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன், மாநிலத்தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் இளையரசு, மாநில தொழிற்சங்க செயலாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் சேலம் இல்லத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

error: Content is protected !!